உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஷக்தி புயல் குஜராத் நோக்கி நகரக்கூடும்; இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

ஷக்தி புயல் குஜராத் நோக்கி நகரக்கூடும்; இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

புதுடில்லி: ஷக்தி புயல் குஜராத் நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. புயல் நெருங்கி வருவதால், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது; இது, தற்போது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு நம் அண்டை நாடான இலங்கை பரிந்துரைத்த, 'ஷக்தி' என பெயரிடப்பட்டு உள்ளது. ஷக்தி புயல் குஜராத் நோக்கி நகரக்கூடும். புயல் நெருங்கி வருவதால், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக, சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் உள்ளவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.புயல் கரையைக் கடக்கும் போது, கரையோர பகுதிகள் அதிக பாதிப்பை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இதனால், கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.ஷக்தி புயல் படிப்படியாக வலுவிழந்து, அரபிக் கடலில் கிழக்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு காற்றின் வேகம் அதிகமாகவும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை