உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேம்பாலம், சாலைகளை தத்தெடுக்க நிறுவனங்களை அழைக்க முடிவு

மேம்பாலம், சாலைகளை தத்தெடுக்க நிறுவனங்களை அழைக்க முடிவு

புதுடில்லி: தலைநகர் டில்லியில் மேம்பாலங்கள், ஆகாய நடைபாதை மற்றும் சாலைத் தடுப்பு ஆகியவற்றை பராமரிக்கும் தத்தெடுப்புத் திட்டத்தில் பங்கேற்க பெரு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்க பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, டில்லி அரசின் பொதுப்பணித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் உள்கட்டமைப்பை பராமரித்து மேம்படுத்த, பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் சிங் வர்மா தலைமையில் ஜூலை மாதம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேம்பாலங்கள், ஆகாய நடைபாதை மற்றும் சாலைத் தடுப்பு ஆகியவற்றை பராமரித்தல், அழகுபடுத்துதல் மற்றும் தினமும் துாய்மைப்படுத்துதல் ஆகியவற்றை, தனியார் பெரு நிறுவனங்களிடம் ஒப்படைக்க அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஈடாக தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ள இடங்களில் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை செய்து கொள்ளலாம். இந்த தத்தெடுப்பு கொள்கைக்காக தேசிய தலைநகரில் தனியார் நிறுவனங்களை நேரடியாக அணுக திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சில நிறுவனங்களுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை