வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று வீலர் மின்சார ஸ்கூட்டர் வழங்கினால் நன்றாக இருக்கும். பணிக்கு சென்று 90% ஈசியாக இருக்கும்
புதுடில்லி: மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு எதிரான பாகுபாடுகளை களையும் வகையில், அவர்களுக்கு உயர்தர உதவி கருவிகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், மாற்றுத் திறனாளிகளும் சிறப்பான முறையில் பணியில் திறன்களை வெளிப்படுத்த முடியும் என அரசு தெரிவித்துள்ளது. உற்பத்தித்திறன் குறை வு மத்திய - மாநில அரசுகளில் உள்ள சில துறைகளில், உற்பத்தித்திறன் குறையும் என்ற அச்சத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்க தயங்குவதாக கூறப்படுகிறது. இது அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களை போல பணியாற்றுவதை உறுதி செய்ய, உயர்தர உதவி கருவிகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இ து குறித்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத் திறனாளிகள் அதிகார மளிப்பு துறை ஒரு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது. அதன் விபரம்: மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை மற்றவர்களுக்கு இணையாக திறம்பட செயல்படுத்த உயர்தர, தொழில்நுட்ப அடிப்படையிலான உதவி கருவிகளை மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வழங்க வேண்டும். உத்தர வு இத்தகைய கருவிகளை வழங்குவதன் மூலம், மாற்றுத்திறனாளி ஊழியர்களும் பிற ஊழியர்களுக்கு இணையாக பணியாற்ற முடியும். ஒவ்வொரு ஊழியரின் தேவைகளையும் அவர்களுடன் கலந்து ஆலோசித்து மதிப்பீடு செய்ய வேண்டும். 'மோட்டார் வீல் சேர்கள்', உயர்தர செவித்திறன் கருவிகள், பார்வை குறைப்பாட்டை களையும் மென் பொருள், மற்றும் தகவமைப்பு கணினி வன் பொருள் போன்ற நவீன கருவிகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உயர்தர கருவிகள் வாங்கும் செலவை அந்தந்த துறைகள் நேரடியாக ஏற்கவும் உத்தர விடப்பட்டுள்ளது. ஒரு ஊழியருக்கு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு ள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று வீலர் மின்சார ஸ்கூட்டர் வழங்கினால் நன்றாக இருக்கும். பணிக்கு சென்று 90% ஈசியாக இருக்கும்