உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டில் இடம்பெயர்வு குறைந்து வருகிறது: பிரதமருக்கான ஆலோசனை குழு அறிக்கை

நாட்டில் இடம்பெயர்வு குறைந்து வருகிறது: பிரதமருக்கான ஆலோசனை குழு அறிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நாட்டுக்குள்ளாக இடம்பெயர்வது குறைந்து வருகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், 2023ல், நாட்டின் ஒட்டுமொத்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, 11.78 சதவீதம் குறைந்துள்ளது' என, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்கிய பயணியர் எண்ணிக்கை தரவு, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மொபைல் சந்தாதாரர்கள் ரோமிங் தரவு, பணம் அனுப்பும் மாவட்ட அளவிலான வங்கி தரவு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, '400 மில்லியன் ட்ரீம்ஸ்' என்ற தலைப்பில், இடம்பெயர்வு குறித்த அறிக்கையை, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ளது. நவம்பரில் உயிரிழந்த பொருளாதார நிபுணர் பிபேக் டெப்ராய், இந்த குழுவின் தலைவராக இருந்த போது இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன் விபரம்:கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45.57கோடியாக இருந்தது. இது, 2023ல், 40.20 கோடியாக குறைந்துள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 37.64 ஆக இருந்த இடம்பெயர்வு விகிதம் தற்போது 28.88 சதவீதமாகக் குறைந்துள்ளது.சிறிய நகரங்களில் மேம்பட்ட பொருளாதார வாய்ப்புகள் காரணமாக நாட்டில் இடம்பெயர்வு குறைந்து வருகிறது. மேற்கு வங்கம், ராஜஸ்தான், உ.பி., - ம.பி., - மஹாாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்கள், புலம்பெயர்ந்தோரை அதிகளவில் ஈர்க்கின்றன.மும்பை, பெங்களூரு நகர்ப்புறம், ஹவுரா, மத்திய டில்லி, ஹைதராபாத் ஆகியவை புலம்பெயர்ந்தோர் வருகையை அதிகம் ஈர்க்கும் மாவட்டங்கள். அதே நேரத்தில் வல்சாத், சித்துார், பாஸ்கிம் பர்தமான், ஆக்ரா, குண்டூர், விழுப்புரம், சஹர்சா ஆகியவை முதன்மையான மாவட்டங்கள்.ஏப்., - -ஜூன், நவ., -- டிச., மாதங்களில், பெரும்பாலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்கின்றனர். இடம்பெயர்வின் அளவு, திசை மற்றும்போக்குகளை தொடர்ந்து கண்காணிப்பது ஒரு சவாலாகவே உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

VIJAYAN
டிச 28, 2024 14:10

கேவலமான அரசியல் , பாதுகாப்பற்ற சமுதாயம் , எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை ,வேலை இல்ல திண்டாட்டம் , தகுந்த ஊதியம் இல்லாமை , இந்த நாட்டில் பிறந்ததர்கு வெட்கி தலை குனிய வேண்டும்.திருட்டு திராவிடம் பொறுப்பற்ற மேலிட அரசியல்


Barakat Ali
டிச 28, 2024 10:19

ஆமா ..... டுமீலு நாடும் பீகார், உபி மாதிரிதான்னு அவங்களுக்கும் புரிஞ்சு போச்சு ....


Sivagiri
டிச 28, 2024 08:39

ஆனால் சட்டவிரோத ஊடுருவல் - பங்களாதேஷ் பர்மா பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் , அதோடு நைஜீரியாகாரய்ங்க நடமாட்டம் ஜாஸ்தியா ஆயிட்டிருக்கு


Kasimani Baskaran
டிச 28, 2024 08:18

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வரிசையில் நிற்போரை பார்த்திருந்தால் இது போன்ற அறிக்கைகள் வராது.


chennai sivakumar
டிச 28, 2024 14:53

அது எனக்கு.நங்குந்தெரிந்து 50 ஆண்டுகளாக Q வரிசை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை