உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் மீது அவதுாறு எத்னால் மீதான வழக்கு ரத்து

ராகுல் மீது அவதுாறு எத்னால் மீதான வழக்கு ரத்து

பெங்களூரு: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அமெரிக்கா சென்றிருந்தபோது பேசிய கருத்தை கண்டித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், விமர்சித்து பதிவிட்டிருந்தார். இதை கண்டித்து நடப்பாண்டு செப்டம்பரில், மாநில காங்கிரஸ் பிரமுகர் மனோகர், ஹைகிரவுண்ட் போலீசில் புகார் செய்திருந்தார்.புகாரில், 'ராகுல் அமெரிக்கா சென்று, நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசி உள்ளார். ஜாதி சர்வே எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்றோ, முஸ்லிமா, கிறிஸ்தவரா என்று கூட தெரியாது. அது பற்றி முதலில் விசாரிக்க வேண்டும்' என்று பசனகவுடா பாட்டீல் எத்னால் பேசியதாக குறிப்பிட்டிருந்தார்.இம்மனு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நாகபிரசன்னா நேற்று அளித்த தீர்ப்பில், எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை ரத்து செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sampath Kumar
டிச 13, 2024 17:12

இது தாண்ட சங்கி மங்கி ஸ்டைல் பிளான் பண்ணி செய்து இருக்கானுக போல அதோட எப்பவுமே எதனாலுக்கு மவுசு ஜாஸ்தி புரிந்தவனபிஸ்த்தாட


enkeyem
டிச 13, 2024 11:16

சுய விளம்பரத்திற்காக தொடரும் வழக்குகளை தள்ளுபடி செய்வது மட்டும் போதாது. வழக்கு வழக்கு தொடுத்தவரிடம் கடுமையான அபராதம் விதிக்கவேண்டும்.. அப்போதுதான் கோர்ட்டின் நேரத்தை வீணடிக்கும் இதுபோன்ற கயவர்கள் அடங்குவார்கள்


என்றும் இந்தியன்
டிச 13, 2024 17:34

சிறிய மாற்றம் - கடுமையான = 5% அவர்களின் சொத்து கணக்கு அபராதம் விதிக்க வேண்டும்