உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2025ஐ சீர்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக மாற்றுவோம்; ராஜ்நாத் சிங் பிரகடனம்!

2025ஐ சீர்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக மாற்றுவோம்; ராஜ்நாத் சிங் பிரகடனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இன்று தொடங்கிய 2025ம் ஆண்டை சீர்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக மாற்றுவோம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.இது குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது: இன்று தொடங்கிய 2025ம் ஆண்டினை சீர்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக மாற்றுவோம். ஆயுதப் படைகளை தொழில்நுட்ப ரீதியாக மாற்றும் வகையில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 21ம் நூற்றாண்டின் சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்த பாதுகாப்பு துறை தயாராகிறது. பல சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பு துறை முன்னோடியாக திகழ்கிறது. தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பு துறை தயாராகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும். எதிர்காலப் போர்களில் வெற்றி பெறுவதற்குத் தேவையான அனைத்து வேலைகளும் செய்யப்படும். பாதுகாப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில், இந்தியா வளர்ச்சி அடையும். படைவீரர்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, அவர்களின் நலனை உறுதிப்படுத்துவோம். படைவீரர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
ஜன 01, 2025 19:36

கொள்ளையருக்கு நாணயம் வெளியிட்டதே சீர்திருத்தம் தானே ????


GMM
ஜன 01, 2025 17:41

நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மையை காக்க நீதி மன்றம் சீர் திருத்தம் அவசியம். - வாதி , பிரதி வாதிக்கு சிவில் வழக்கு எண் கொடுத்தவுடன் பலன், பாதிப்பு சமமாக இருக்க வேண்டும். 5 ஆண்டுக்குள் வழக்கு தீர்வு கட்டாயம். முடிக்கவில்லை என்றால், நீதி பதவி உயர்வு நிறுத்தம். வக்கீல் 5 ஆண்டுகள் பணி செய்ய தடை. - மத்திய நிர்வாக முடிவிற்கு எதிராக மாநிலம் செயல்பட தடை. சில மாநிலம் குறு நில மன்னர் போல் செயல் படுகின்றன . இதனை வக்கீல் ஊக்கப்படுத்தி வருகின்றனர். மத்திய, மாநில நிர்வாக முடிவு காலவரையறை 6 மாதம். - தேர்தல் சீர் திருத்தம். வாக்காளர் , ஆதார் இணைப்பு. முகவரி சான்று உள்ளூர் தபால் நிலையம். வயது சான்று மத்திய, மாநில அரசு மருத்துவர். இறப்பு சான்று, நகராட்சி. இவைகள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் வாக்காளர் அட்டை. நீதிமன்றம், அரசியல் தலையீடு கூடாது.


பிரேம்ஜி
ஜன 01, 2025 16:57

வழக்கமான வாய் வடை!


N Sasikumar Yadhav
ஜன 01, 2025 18:46

உங்க கோபாலபுர எஜமானை பற்றி இப்படியெல்லாம் பேச கூடாது


MARI KUMAR
ஜன 01, 2025 15:45

வாழ்த்துக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள்


ghee
ஜன 01, 2025 18:07

அறிவிலி பிரேம்ஜி....பாதுகாப்பு துறை நீ மூக்கை நுழைக்காதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை