உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மரங்கள் கணக்கெடுப்பு தாமதம்; ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு

மரங்கள் கணக்கெடுப்பு தாமதம்; ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு

பெங்களூரு; மரங்கள் கணக்கெடுப்பு பணியில் தாமதம் செய்வதால், மூன்று மண்டலங்களின் மரங்கள் கணக்கெடுப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய, பெங்களுரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.பெங்களூரில் காய்ந்த மரங்கள், மரக்கிளைகளால் அபாயம் ஏற்படுவதால், இத்தகைய மரங்களை அகற்ற மாநகராட்சி திட்டமிட்டது. முதலில் மரங்களின் கணக்கெடுப்பு நடத்த, மண்டல வாரியாக டெண்டர் அளித்துள்ளது. இவற்றில் எலஹங்கா, தாசரஹள்ளி, மஹாதேவபுரா மண்டலங்களில், மரங்கள் கணக்கெடுப்பு நடத்தும் பொறுப்பை ஏற்ற நிறுவனம், எதிர்பார்த்த அளவில் பணிகளை நடத்தவில்லை.சில வார்டுகளில் குறைந்த அளவில் மரங்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. எனவே, இந்நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இது குறித்து, மாநகராட்சி வனப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:மூன்று மண்டலங்களில், எதிர்பார்த்த அளவில் மரங்கள் கணக்கெடுப்பு நடத்தவில்லை. இந்த மண்டலங்களுக்கு இன்னும் பில் தொகை வழங்கவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, மூன்று மண்டலங்களின் ஒப்பந்தத்தை கைவிட, நிறுவனம் முடிவு செய்துள்ளது. விதிமுறைப்படி ஒப்பந்த டிபாசிட் தொகையை, மாநகராட்சி முடக்கும். மூன்று மண்டலங்களுக்கும் புதிதாக டெண்டர் அழைக்கப்படும். இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பு தகவல்களை புதிய ஒப்பந்ததாரரிடம் அளித்து, பணியை தொடர நடவடிக்கை எடுத்தப்படும்.மண்டல வாரியாக தலா 50 லட்சம் ரூபாய் செலவில், மரங்கள் கணக்கெடுப்பு பணி நடப்பாண்டு ஜனவரியில் துவங்கப்பட்டது. ஐந்து மண்டலங்களில் பணி மும்முரமாக நடக்கிறது. விரைந்து பணியை முடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை