டில்லி குண்டுவெடிப்பு வழக்கு: சதிகாரன் உமர் கூட்டாளிக்கு 10 நாள் என்ஐஏ காவல்
புதுடில்லி: டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில், கைது செய்யப்பட்ட அமீர் ரஷீத்துக்கு 10 நாள் என்ஐஏ காவல் விதித்து, டில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.டில்லியில் உள்ள செங்கோட்டை அருகே நவம்பர் 10ம் தேதி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஜம்முகாஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி, காரை ஓட்டிச் சென்றார் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதை கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்த பயங்கரவாதி உமர் நபிக்கு, அவரது நண்பரும், காஷ்மீரைச் சேர்ந்த வருமான அமீர் ரஷீத் அலி என்பவர் வழங்கினார். காரும் அவர் பெயரில் பதிவாகி உள்ளது. இந்நிலையில், என்.ஐ.ஏ., போலீசார் நேற்று அவரை கைது செய்து விசாரணையை துவங்கினர்.அவர் இன்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அமீர் ரஷீத்துக்கு 10 நாள் என்ஐஏ காவல் விதித்து, டில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.