உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹோட்டல் டெண்டர் முறைகேடு வழக்கு; தேஜஸ்விக்கு சிக்கல்

ஹோட்டல் டெண்டர் முறைகேடு வழக்கு; தேஜஸ்விக்கு சிக்கல்

புதுடில்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீஹார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இண்டி கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரையில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அவரது இந்தப் பதவி காலத்தில், ராஞ்சி மற்றும் பூரியில் உள்ள இந்திய ரயில்வேவுக்கு சொந்தமான ஹோட்டல்களின் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை தனியாருக்கு டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி உள்பட குடும்பத்தினர், இந்திய ரயில்வே அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, முன்னாள் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இது அவரது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பீஹாருக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது தந்தை மீது முறைகேடு புகாரில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இண்டி கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பேசும் தமிழன்
அக் 13, 2025 19:52

சீக்கிரம்... சட்டு புட்டுன்னு உள்ளே போட்டு முடியுங்கள்.... அப்படியே ஜாமினில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் அவர்களின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும்.


வாய்மையே வெல்லும்
அக் 13, 2025 14:51

இப்போ நம்ம ஸ்டாலின் சார் / ராவுல் சார் / பப்பி மேடம் பீகார் போயிட்டு தேஜஸ்விக்கு வோட்டு சேகரிக்க சொல்லுங்க. இருக்கவே இருக்கு துட்டு பணம் வீசி அடிங்க. வோட்டு உங்களுக்கே . பீகார்ல ஜெயிச்சிரலாம்


Venugopal, S
அக் 13, 2025 14:41

இவர் தந்தை மாட்டு தீவனத்தில் ஊழல் செய்து உலக மகா புரட்சி செய்தவர். இவர் மகன் அனைத்திலும் ஊழல்...இந்த யோக்கியர்கள் ஓட்டு திருட்டை பற்றி பிரசங்கம் செய்வார்...கொள்ளை கு‌ம்ப‌ல்


SUBRAMANIAN P
அக் 13, 2025 16:27

ஏ.. இது எந்த வேணுகோபாலு... ஒரே குழப்பமா இருக்கே


வாய்மையே வெல்லும்
அக் 13, 2025 17:03

சு சார் ஒரே பெயரில் ஒரு நிஜம் ஒரு நிழல் என எடுத்துக்கொள்ளவும் .. யார் உண்மையா எழுதறாங்களோ அது நிஜம் வலதுசாரி வேணு கோபால் .. யாரு பொய்யும் புரட்டும் அவிழ்த்து காழ்ப்புணர்ச்சியுடன் எழுதறாங்களோ அவங்க டூப்பு இடது சாரி வேணுகோபால் ..


ngm
அக் 13, 2025 19:11

ஒரே மாதிரி உலகில் ஏழு பேர்கள் இருப்பார்கள். இங்கே இரண்டு மட்டுமே மற்ற ஐந்து...?


Ramasamy
அக் 13, 2025 14:08

பீகார் கட்டுமர குடும்பம்


RAMESH KUMAR R V
அக் 13, 2025 13:46

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் குடும்ப ஊழல்


rajasekaran
அக் 13, 2025 13:42

உடேன திருமாவளவன், ஸ்டாலின் கூட்டாளிகள் இது அண்ணாமலை செய்த வலை என்றும் rss , பிஜேபி செய்த வலை என்றும் அறிக்கை வெளியிடுவார்கள்.


Subburamu K
அக் 13, 2025 13:36

In many occasions, voters are supporting looters of the nation because of their caste religious community sentiments. Such sentimental idiots are in larger numbers in our nation, that is dangerous to democracy


SUBRAMANIAN P
அக் 13, 2025 13:25

குற்றச்சாட்டு தானே பதிவு பண்ணிருக்காங்க . தண்டனையே குடுத்துட்டமாதிரி அதிர்ச்சின்னு போடுறீங்க.. குற்றம் நிறுபிக்கப்பட்டு தண்டனை வழங்கறதுக்குள்ள நீதிபதியும் செத்துருவாரு, குற்றவாளிகளும் நல்ல ஆண்டு அனுபவிச்சிட்டு செத்துருவாங்க.. நல்ல சட்டம்.. நல்ல நீதிமன்றம்.. நல்ல நாடு..


sundaresan Ramamoorthy
அக் 13, 2025 15:30

அதானே அட்ரா சக்கை .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை