உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயுஷ்மான் திட்டத்தை செயல்படுத்த டில்லி அரசு ஏப்.,10ல் ஒப்பந்தம்

ஆயுஷ்மான் திட்டத்தை செயல்படுத்த டில்லி அரசு ஏப்.,10ல் ஒப்பந்தம்

புதுடில்லி:மத்திய அரசின் 'ஆயுஷ் மான்' திட்டத்தை செயல்படுத்த ஏப்.,10ம் தேதி, மத்திய அரசுடன் டில்லி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது.இதுகுறித்து, டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் சிங், நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' திட்டத்தை டில்லியில் செயல்படுத்த மத்திய அரசுடன் ஏப்ரல் 10ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டில்லி அரசு கையெழுத்திடும்.கடந்த மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலின் போதே, பா.ஜ., வெற்றி பெற்றால் மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தை செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்து இருந்தோம்.முந்தைய ஆம் ஆத்மி அரசு, மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தை செயல்படுத்த மறுத்து விட்டது. ஆம் ஆத்மி அரசு தானாகவே ஒரு திட்டத்தை தயாரித்து அதைத்தான் செயல்படுத்தியது.ஆம் ஆத்மி அரசால் துவக்கப்பட்ட பல மொஹல்லா கிளினிக்குகள் வாடகை கட்டடங்களில் இயங்கினாலும் அவை செயல்படவில்லை. எனவே, செயல்பாட்டில் இல்லாத மொஹல்லா கிளினிக்குகளை மூடிவிட்டு, அதற்குப் பதிலாக அரசின் சொந்த கட்டடத்திலேயே புதிய கிளினிக்குகள் அமைக்கப்படும்.ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் தற்போது ஏழு மொஹல்லா கிளினிக்குகள் வாடகைக் கட்டடத்தில் இயங்குகின்றன. ஆனால், அரசு நிலமே அந்தப் பகுதிகளில் இருக்கிறது. எனவே, செயல்பாட்டில் இல்லாத 160 மொஹல்லா கிளினிக்குகளை மூடி விட்டு, அரசு இடத்தில் புதிய கிளினிக்குகள் திறக்கப்படும்.மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏப்.,10ம் தேதி கையெழுத்திட்டவுடன், அதை செயல்படுத்துவதற்கான பணிகளும் அடுத்தடுத்து துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ