உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் ‛‛ ரா உளவுத்துறை அதிகாரிக்கு டில்லி ஐகோர்ட் பிடிவாரண்ட்

முன்னாள் ‛‛ ரா உளவுத்துறை அதிகாரிக்கு டில்லி ஐகோர்ட் பிடிவாரண்ட்

புதுடில்லி: அமெரிக்க காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலை முயற்சி உள்ளிட்டபல்வேறு கிரிமினல் வழக்குகளில் முன்னாள் உளவுத்துறை அதிகாரிக்கு டில்லி ஐகோர்ட் ஜாமினினில் வெளிவர முடியா பிடிவாரண்ட் அனுப்பியுள்ளது. கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2022ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் , இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு உள்ளதாக அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இதனால் இந்திய -கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது.2023 டிசம்பரில் அமெரிக்காவில் வசிக்கும் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் மீது, கொலை முயற்சி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், இந்திய உளவு அதிகாரி சிசி-1 என்ற ரகசிய ஏஜென்டாக இந்தியா உளவு அமைப்பின் ‛ரா ' அதிகாரி விகாஷ் யாதவ் என்பவரின் தலைமையிலான குழு நியூயார்க் நகரில் இருந்து திட்டம் திட்டியது தெரியவந்தது.இதுதொடர்பாக டில்லி சிறப்பு போலீசார் 2023ல் கைதுசெய்தனர். அவர்கள் மீது ஆட்கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் என பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர். 2024ல் மார்ச்சில் ஜாமினில் விடுதலையானார். இந்த வழக்கு தொடர்பாக அவருக்குபல முறை டில்லி உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தும் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று நடந்த விசாரணையில் விகாஷ் யாதவிற்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சவுரபா பிரதாப் சிங் உத்தரவிட்டார். . வழக்கு அக். 17-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை