உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அபிஷேக் பச்சன் வழக்கில் டில்லி ஐகோர்ட் தீர்ப்பு

அபிஷேக் பச்சன் வழக்கில் டில்லி ஐகோர்ட் தீர்ப்பு

புதுடில்லி:'பாலிவுட் நடிகரும், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சனின் படம், பெயர் போன்றவற்றை பயன்படுத்தி, எவ்வித செய்திகளும் வெளியிடக் கூடாது' என சில இணையதளங்களுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி தேஜாஸ் கரியா கடந்த 10ம் தேதி பிறப்பித்த உத்தரவு: அபிஷேக் பச்சனின் தனிப்பட்ட உரிமைகளில் யாரும் தலையிட முடியாது. அவரின் பெயர், படம் போன்றவற்றை எந்த இணையதளமும் பயன்படுத்தக் கூடாது. மேலும், அவரின் பெயர், படத்தை தவறாக பயன்படுத்தும் இணையதளங்களை, கூகுள் இணையதளம் உடனடியாக நீக்க வேண்டும். அந்த இணையதளங்கள் நீக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ