உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை தேர்தல்: இடதுசாரி மாணவர்கள் அமைப்பு வெற்றி

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை தேர்தல்: இடதுசாரி மாணவர்கள் அமைப்பு வெற்றி

புதுடில்லி: டில்லி ஜவகர்லால் நேரு பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில், நான்கு மத்திய குழு பதவிகளில் மூன்றினை, இடதுசாரி மாணவர்கள் அமைப்பு தன்வசப்படுத்தியது. ஏ.பி.வி.பி., அமைப்பு இணைச் செயலாளர் பதவியை வென்றது.டில்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்று. இங்குள்ள மாணவர் சங்கத்திற்கான வாக்குப்பதிவு ஏப்.25 அன்று நடைபெற்றது, அதில் 70 சதவீத ஓட்டுப்பதிவு பதிவாகியுள்ளது. தகுதியுள்ள 7,906 மாணவர்களில், சுமார் 5,500 பேர் வாக்களித்தனர்.தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி, ஏ.ஐ.எஸ்.ஏ- டி.எஸ்.எப் அணியின் நிதீஷ் குமார் 1,702 ஓட்டுக்கள் பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.ஜனநாயக மாணவர் கூட்டமைப்பின் மணிஷா 1,150 ஓட்டுக்கள் பெற்று துணைத் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் 1,116 ஓட்டுக்கள் பெற்ற, ஏ.பி.வி.பி.,யின் நிட்டு கவுதமை மிக குறுகிய ஓட்டு விதித்தியாசத்தில் தோற்கடித்தார். பொதுச் செயலாளர் பதவிக்கு, பாத்திமா1,520 ஓட்டுக்கள் பெற்று தேர்வு செய்யப்பட்டார். இணைச் செயலாளர் ஆக ஏபிவிபி அமைப்பை சேர்ந்த வைபவ் மீனா 1,518 ஓட்டுக்கள் பெற்று தேர்ந்து எடுக்கப்பட்டார். நான்கு மத்திய குழு பதவிகளில் மூன்றினை, இடதுசாரி மாணவர்கள் அமைப்பு வென்றுள்ளது.மொத்தம் உள்ள 45 கவுன்சிலர் பதவி இடங்களில் 23 பதவி இடங்களை பாஜ ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி கைப்பற்றியுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

மீனவ நண்பன்
ஏப் 27, 2025 22:09

பறைமேளம் தட்டி பாடறது நிற்குமா ?


Saran
ஏப் 27, 2025 22:07

JNU is one of the university where you can find the students from all over India even from other countries. Preparing for UPSC exam is one of goal for many students. But i hate this university only due to more numbers of uncivilized Biharis.


மூர்க்கன்
ஏப் 27, 2025 21:49

அடேங்கப்பா ?? டெல்லி கார்ப்பரேஷன் மேயர் தேர்தல் நடந்தவிதம் அதை உச்ச நீதி மன்றமே கண்டித்ததையும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா?? என்ன??


Ranga
ஏப் 27, 2025 21:42

வாழ்துக்கள் மாணவர்களே... புதிய அத்தியாயம் தொடங்கட்டும். நாட்டை அழிக்கும் இடதுசாரிகள் ஒழியட்டும்.


Svs Yaadum oore
ஏப் 27, 2025 21:19

நேரு பல்கலை வரலாற்றில் இது மிக முக்கியமான முதல் படிக்கல் .....இது பாரதம் ஹிந்துஸ்தான் பாரத வர்ஷா .....கல்லூரி பல்கலை பள்ளிகள் எங்கும் மதம் மாற்றிகள் பிடியில் கொண்டுவந்தது காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ......இனி அதற்கு முடிவுரை எழுதட்டும் ....பல்கலை கம்யூனிஸ்ட்கள் பிடியில் இந்தியா நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதினார்கள் .....அதற்கெல்லாம் முடிவுரை எழுதும் பணி துவக்கம் ....


பெரிய ராசு
ஏப் 27, 2025 21:14

ஹிந்து ராஜ்யம் எழும்பட்டும் ...ஒழியட்டும் இடதுசாரி தேசத்துரோகிகள்


முக்கிய வீடியோ