உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிளம்பும் நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு: லண்டன் செல்லும் ஏர் இந்தியா ட்ரீம் லைனர் விமானம் ரத்து

கிளம்பும் நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு: லண்டன் செல்லும் ஏர் இந்தியா ட்ரீம் லைனர் விமானம் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ட்ரீம் லைனர் விமானம், மேலே பறக்க இருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விமானம் புறப்பட்ட இடத்துக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது.ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ட்ரீம் லைனர் விமானம்( ஏஐ 2017) தலைநகர் டில்லியில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு கிளம்பியது. ஓடுபாதையில் புறப்பட்ட அந்த விமானம் மேலே பறக்க இருந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர்.இது தொடர்பாக விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், வழக்கமான நடைமுறைகளின்படி, அந்த விமானம், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில், மாற்று விமானம் மூலம் பயணிகள் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பயணிகளுக்கு தேவையான உதவிகளை ஊழியர்கள் செய்து கொடுத்து வருகின்றனர் பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பே எங்களுக்கு அதிக முக்கியத்துவம் எனத் தெரிவித்துள்ளார்.கடந்த ஜூன் 12ம் தேதி ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்த போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய சிறிது நேரத்தில் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த ஒருவரைத் தவிர 241 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் விமானம் இடத்தில் இருந்த 20க்கும் மேற்பட்டவர்களும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூலை 31, 2025 21:19

ஆகஸ்ட் மாதம் நான் ஏர் இந்தியா விமானத்தில் பெங்களூரு டு Sanfrancisco டைரக்ட் flightil பயணம் செய்ய உள்ளேன். இந்த செய்திகளை தினம் தினம் படிக்கும்போதெல்லாம் நெஞ்சு பக் பக்...


Ramesh Sargam
ஜூலை 31, 2025 20:53

என்னய்யா சோதனை இந்த ஏர் இந்தியா விமானங்களுக்கு?


புதிய வீடியோ