உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹோட்டல்களுக்கு குண்டு மிரட்டல் டில்லி நபர் கைது

ஹோட்டல்களுக்கு குண்டு மிரட்டல் டில்லி நபர் கைது

மூணாறு:மூணாறில் ஹோட்டல், தங்கும் விடுதி ஆகியவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த டில்லியைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், மூணாறில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்தில் வெடித்து சிதறும் என மூணாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏப்., 30ல் இ - மெயில் வாயிலாக மிரட்டல் வந்தது. விசாரணையில், மிரட்டல் விடுத்தவர் புதுடில்லி, பட்டய நகரைச் சேர்ந்த நிதின்கர்மா, 30, என தெரிய வந்தது. மூணாறு போலீசார் நிதின்கர்மாவை கைது செய்தனர். ஹோட்டல் நிர்வாகம் படித்துள்ள நிதின்கர்மா மீது ஏற்கனவே நான்கு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி