உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோருக்கு டில்லி மெட்ரோ ரயில் சிறப்பு ஏற்பாடு

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோருக்கு டில்லி மெட்ரோ ரயில் சிறப்பு ஏற்பாடு

புதுடில்லி:சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோர் வசதிக்காக, டில்லி மெட்ரோ ரயில் சேவை நாளை காலை, 6:00 மணிக்கே துவங்கும் என டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, டில்லி மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை நிர்வாக இயக்குனர் அனுஜ் தயாள் வெளியிட்டுள்ள அறிவிப்பு:யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸஸ் முதன்மைத் தேர்வு நாளை நடக்கிறது.தேர்வு எழுதுவோர் வசதிக்காக மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பிங்க் லைன், மெஜந்தா லைன் மற்றும் கிரே லைன் ஆகிய வழித்தடங்களில் வழக்கத்தை விட முன்னதாக காலை 6:00 மணிக்கே ரயில்கள் இயக்கப்படும்.இதனால், தேர்வு எழுதச் செல்வோர் தங்கள் தேர்வு மையங்களை சரியான நேரத்தில் அடைய முடியும்.பிங்க் வழித்தடத்தில் மஜ்லிஸ் பார்க், -ஷிவ் விஹார் மற்றும் மஜ்பூர்- பாபர்பூர் ஆகிய நிலையங்களில் இருந்து 6:00 மணிக்கு முதல் ரயில் புறப்படும். அதேபோல், மெஜந்தா தடத்தில் ஜனக்புரி மேற்கு மற்றும் தாவரவியல் பூங்காவிலிருந்து காலை 6:00 மணிக்கு ரயில் புறப்படும். அதேநேரத்தில், கிருஷ்ணா பார்க் விரிவாக்கம் நிலையத்தில் இருந்து அதிகாலை 5:50 மணிக்கு ரயில் புறப்படும்.கிரே வழித்தடத்தில், தன்சா பேருந்து நிலையம் மற்றும் துவாரகா சந்திப்பு நிலையங்களில் இருந்து காலை 6:00 மணிக்கு சேவை துவங்கும்.இதுதவிர, மற்ற வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ