உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்; 10 பேரை கைது செய்தது டில்லி போலீஸ்

எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்; 10 பேரை கைது செய்தது டில்லி போலீஸ்

புதுடில்லி: ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுடன் தொடர்புடைய எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 10 பேரை டில்லி போலீசார் கைது செய்தனர்.எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவதாக டில்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி டில்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுடன் தொடர்புடைய எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து 1667 கிராம் ஹெராயின் உட்பட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 16 மொபைல் போன்கள் மீட்கப்பட்டன. ரூ 10 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் டில்லியில் போதைப்பொருட்களை சப்ளை செய்து வந்தனர். கடத்தல் கும்பலின் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர். டில்லி போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் கையும், களவுமாக சிக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

chennai sivakumar
ஏப் 20, 2025 08:14

சிங்கப்பூர் போல தண்டனை அமல் படுத்த வேண்டும்


kumarkv
ஏப் 20, 2025 07:57

பங்ளாதேஷ் முஸ்லீம்கள்


naranam
ஏப் 20, 2025 04:28

உடனே இந்தியாவில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை என்று ஊர் ஊராகச் சென்று திமுக மற்றும் காங்கிரஸ் காரனுங்க கதருவானுங்களே!


naranam
ஏப் 20, 2025 04:15

ஐயோ சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று கதறுவானுங்களே!


thehindu
ஏப் 19, 2025 23:21

நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது


Shankar
ஏப் 19, 2025 20:34

அப்படியே கோர்ட்ல கொண்டுபோய் நிக்க வச்சீங்கன்னா நம்ம நீதிபேதிகள் எல்லாருக்கும் உடனே ஜாமீன் வழங்கி அவர்களுடைய தொழிலை இன்னும் சிறப்பாக செய்ய அனுமதித்து விடுவார்கள். இதுதானே காலம் காலமா நடந்துட்டு இருக்கு.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 19, 2025 20:22

டுமீல்நாட்டு போலீச்சு சிரிப்பு போலீச்சா ?? அல்லது டுமீல்நாட்டு கிம்ச்சை மன்னர் ச்சிரிப்பு மன்னரா ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை