உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது; 6 வாக்குறுதிகளை அள்ளி வீசினார் கெஜ்ரிவால்!

டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது; 6 வாக்குறுதிகளை அள்ளி வீசினார் கெஜ்ரிவால்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியை வெற்றி பெற செய்தால், இலவச மின்சாரம், கல்வி உள்ளிட்ட 6 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் அறிவித்தார்.டில்லியில் தற்போது ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அதிஷி முதல்வராக உள்ளார். டில்லி சட்டசபைக்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆட்சியை தக்க வைக்க, ஆம்ஆத்மி அரசு பாடுபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (நவ.,22) சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாத்தை ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: ஆம்ஆத்மி கட்சிக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் தனது கட்சியால் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்படும். ஆம் ஆத்மி கட்சி ஆட்சி வந்தால் 6 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். எங்களது வாக்குறுதிகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த, 65 ஆயிரம் கூட்டங்களை ஆம்ஆத்மி நடத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

கெஜ்ரிவால் அறிவித்த ஆறு வாக்குறுதிகள் என்னென்ன?

1. இலவச கல்வி,2. இலவச மின்சாரம்,3. இலவச தண்ணீர்,4. இலவச மருத்துவ சிகிச்சை,5. இலவச பஸ் பயணம், பெண்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படும்,6. அயோத்தி, வாரணாசி உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு மூத்த குடிமக்களை வழிபாடு செய்ய அழைத்து செல்வோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

visu
டிச 14, 2024 14:18

இதுபோன்ற இலவசங்கள் விளிம்பு நிலை மக்களுக்கு சென்றால் பரவாயில்லை உதரணமாக 150 யூனிட் க்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் இலவசம் என்று அறிவிக்கலாம் வீட்டின் அளவுக்கு ஏற்ப குடிநீர் கட்டணம் நிர்ணயிக்கலாம் கால் இல்லாத கண்பார்வையற்றோருக்கு முழுவதும் இலவசம் அறிவிக்கலாம் கல்வி எல்லோருக்கும் இலவசம் கொடுக்கலாம் அதர்க்கு பதிலா பெண்களுக்கு கொடுக்கும் 5000 தடை செய்யலாம் மருத்துவம் ஏழை நடுத்தர மக்களுக்கு இலவசம் கொடுக்கலாம் அதற்கேற்ப மருத்துவமனைகளை அதிகரிக்க வேண்டும்


Narasimhan
நவ 22, 2024 23:23

காற்று மாசு விட்டுட்டீங்களே


Sivak
நவ 22, 2024 22:34

இந்த இலவசமெல்லாம் வரியாக மாறி நம் தலையில் தான் விழும் ... படித்த முட்டாள்களுக்கு புரிவதில்லை ...


Sivak
நவ 22, 2024 22:33

அதென்ன பெண்களுக்கு மட்டும் ஓ சி பஸ் ஓ சில ஆயிரம் ரூபாய் .... ஒருத்தன் கூட கேட்கமாட்டேங்கிறான் ஆண்களுக்கு ஏன் தருவதில்லை என்று ? பெண்கள் வேலைக்கு போகவில்லையா சம்பாதிக்க வில்லையா ? இல்லை ஆண்கள் எல்லாரும் ஆபீசர் வேலைக்கு செல்கிறார்களா ? இல்லை ஆண்கள் அனைவரும் லட்சாதிபதிகளா ?


visu
டிச 14, 2024 14:11

உங்களுக்கு என் ஆதரவு


rama adhavan
நவ 22, 2024 22:03

கல்யாணத்தில் முகூர்த்தம் முடியும் சிறிது நேரத்திற்கு முன் தான் சமைக்க வேண்டும். அப்போது தான் சூடாக, சுவையான விருந்து கிடைக்கும். முன்னதாக சமைத்து இலையில் பரிமாறினால் விருந்து ஆறிவிடும். சுவைக்காது. அது போலவே தேர்தல் நடாவடிக்கையும்.


vijay
நவ 22, 2024 21:29

போன முறையே இதெல்லாம் செய்வோம் என்று சொல்லி உருப்படியா அதை செய்யல. திரும்பவுமா?


தமிழ்நாட்டுபற்றாளன்
நவ 22, 2024 19:13

என்ன இது அப்படியே திராவிட மாடல் copy யா இருக்கு நாட்டுக்கே முன்னோடி திராவிட மாடல்


Rpalnivelu
நவ 22, 2024 17:14

டெல்லி படித்தவர்கள் மிகுந்த நகரம். லூசுத்தனமான வாக்குறுதிகளை ஏன் நம்பி வாக்களிக்கிறீர்கள்? மெண்டல் ஹாஸ்பிடல் செல்ல வேண்டியவனெல்லாம் தலைவனாக இருந்தால் இதுதான் மக்களின் கதி


ganapthy subramanian
நவ 22, 2024 16:59

உச்ச நீதி்மன்றம் தாமாக முன் வந்து இந்தியாவின் பொருதாளரத்தை்காப்பாற்ற வேண்டும்


Madras Madra
நவ 22, 2024 16:45

யாரும் உழைக்க வேண்டாம் எல்லாம் இலவசம் ஒரு நாள் நாடு போண்டி ஆயிடும் ஆபத்தான அயோக்கிய அரசியல் மக்களை சுய மரியாதையோடு உழைத்து மகிழ்ச்சியாக வாழ வழி ஏற்படுத்தி கொடுக்க துப்பில்லாத வஞ்சக அரசியல் நாட்டின் ஜனநாயகத்தின் சாப கேடு


முக்கிய வீடியோ