உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் முதல்வர் மகன்களை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டி

முன்னாள் முதல்வர் மகன்களை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புதுடில்லி சட்டசபை தொகுதியில் முன்னாள் முதல்வர் மகன்களை எதிர்த்து போட்டியிட போவதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டில்லி சட்டசபைக்கு பிப்., மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜ., ஆகியன தனித்தனியே போட்டியிடுகின்றன. இதற்காக அக்கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இதன்படி புதுடில்லி தொகுதியில் டில்லியில் மூன்று முறை காங்கிரஸ் சார்பில் முதல்வர் பதவி வகித்த ஷீலா தீட்ஷித் மகன் சந்தீப் தீட்ஷித்தை அக்கட்சி களமிறக்கி உள்ளது. அதேபோல் முன்னாள் முதல்வர் ஷாகிப் சிங் வர்மா மகன் பர்வேஷ் வர்மாவை இத்தொகுதியில் பா.ஜ., களமிறக்கி உள்ளது.இந்நிலையில், இதே புதுடில்லி தொகுதியில் ஆம் ஆத்மி தொகுதியில் போட்டியிடப் போவதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார். இத்தொகுதியில் முதல்வர் மகன்களுக்கும், சாமானிய மனிதருக்கும் இடையில் இங்கு போட்டியிருக்கும் எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

raja
டிச 14, 2024 06:58

முன்னாள் முதல்வர்கள் மகனை எதிர்த்து சாமானியனாம்... ஏன் இவன் முன்னாள் முதல்வர் இல்லையா... கேக்கிறவனை கேனையங்கள் என்று நினைக்கிறானுவோளோ....


புதிய வீடியோ