உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடைநிலை சேர்க்கை டில்லி பல்கலை அறிவிப்பு

இடைநிலை சேர்க்கை டில்லி பல்கலை அறிவிப்பு

புதுடில்லி:டில்லி பல்கலையின் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்புகளுக்கான, இடைநிலை சேர்க்கை நேற்று மாலை, 5:00 மணிக்கு துவங்கியது. முந்தைய சுற்றுகளில் விண்ணப்பிக்க தவறிய மாணவ - மாணவியர், 10ம் தேதி மாலை, 5:59 மணி வரை விண்ணப்பிக்கலாம். டில்லி பல்கலையின் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை சுற்றுகள் முடிவடைந்த நிலையில், காலியாக உள்ள இடங்களின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த இடங்களுக்கான இடைநிலை சேர்க்கை நேற்று மாலை, 5:00 மணிக்கு துவங்கியது. ஏற்கனவே நடந்த, இரண்டு சுற்றுகளில் பங்கேற்க தவறிய மாணவ - மாணவியர் இடைநிலை சேர்க்கையில், 10ம் தேதி மாலை 4:59 மணி வரை, பல்கலையின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே பதிவு செய்யாத அல்லது இரண்டாம் கட்ட சேர்க்கையை முடிக்கத் தவறியவர்கள், 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.டில்லி பல்கலையின், 69 கல்லுாரிகளில் உள்ள 79 இளங்கலைப் படிப்புகளில் 71,130 மாணவர்கள் ஏற்கனவே சேர்க்கை பெற்றுள்ளனர். ஆனால், 2025 - 20-26 கல்வியாண்டில் மொத்தம் 71,624 இளங்கலை இடங்கள் உள்ளன. இடைநிலைச் சேர்க்கை ஒதுக்கீட்டுப் பட்டியல், 13ம் தேதி வெளியிடப்படும். அனைத்த் சேர்க்கைகளும், 19ம் தேதிக்குள் நிறைவு செய்யப்படும் என டில்லி பல்கலை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை