டில்லி உஷ்ஷ்ஷ்... பலுசிஸ்தானுக்கு அங்கீகாரம்?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பாகிஸ்தானின் ஒரு மாநிலம் பலுசிஸ்தான். இங்குள்ள போராளிகள், 'பலுசிஸ்தானை தனி நாடாக்க வேண்டும்; பாகிஸ்தானுடன் இருக்க மாட்டோம்' என, தனி கொடி, நாடு என அறிவித்து விட்டனர்.தவிர, இங்குள்ள பலுசிஸ்தானின், 'லிபரேஷன்' அமைப்பு, தொடர்ந்து பாக்., ராணுவத்தை தாக்கி, பலத்த சேதத்தை உண்டாக்கி வருகிறது. பாக்., ரயிலை கடத்தி, அதன் ராணுவ வீரர்களை கொன்றது, பி.எல்.ஏ., எனப்படும் இந்த பலுசிஸ்தான் சுதந்திர அமைப்பு. மேலும், ஜீப்பில் சென்ற ராணுவ வீரர்களையும் சமீபத்தில் கொன்றது. இது, பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்துாருக்கு ஆதரவு அளித்தது பி.எல்.ஏ., 'பலுசிஸ்தானை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும்' என, உலக நாடுகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது பி.எல்.ஏ., 'இதை, தனி நாடாக அறிவித்து, டில்லியில் பலுசிஸ்தான் துாதரகம் அமைக்க இந்தியா முற்படுமா?' என்கிற கேள்வி, டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையே, 'பல காலமாக, பி.எல்.ஏ.,விற்கு இந்தியா உதவி செய்கிறது' என, பாக்., குற்றஞ்சாட்டி வருகிறது.