உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர்; வெப்பநிலை டில்லியில் 7 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிவு

வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர்; வெப்பநிலை டில்லியில் 7 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிந்ததால், குளிர் வாட்டி வதைக்கிறது. மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர்.டிசம்பர் மாதம் வந்தாலே, வட மாநிலங்களில் கடும் குளிர் வந்து விடும். அதன்படி வெப்ப நிலை குறைந்து குளிர் அதிகரிக்க துவங்கி விடுகிறது. டில்லியில் இன்று (டிச.,23) வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிந்ததால் அடர்த்தியான பனி மூட்டம் பல்வேறு பகுதிகளை மூடியது. அலிபூர், ஆனந்த் விஹார், பவானா மற்றும் புராரி, தல்கடோரா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான குளிரால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையில், ' டில்லியில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றி தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது. காற்றுத் தரக் குறியீடு 409 ஆக உள்ளது என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா, நொய்டா, கான்பூர், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது. கடுமையான குளிர் நிலவி வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை