மேலும் செய்திகள்
அக்., 7 தேதி முதல் செயற்கை மழை சோதனை
26-Sep-2025
புதுடில்லி: அக்.29ம் தேதி முதல் டில்லியில் செயற்கை மழைப்பொழிவுக்கு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.தலைநகர் டில்லியில் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் காற்று மாசு கடுமையாக அதிகரிக்கும். அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பது, வாகனப் புகை என பல்வேறு காரணங்களால் டில்லியில் காற்று மாசு அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த அக்.7ம் தேதியன்று டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா நிருபர்களிடம் கூறுகையில், ''வடமேற்கு டில்லியின் ஐந்து இடங்களில் செயற்கை மழை சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்ததால் சோதனை ஒத்தி வைக்கப்பட்டது'' என்றார்.இந்நிலையில் நேற்று டில்லி முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''வானிலை நிலைமைகள் சாதகமாக, குறிப்பாகப் போதுமான மேக அடர்த்தி மற்றும் ஈரப்பதம் இருந்தால், வரும் அக் 29 மற்றும் 30ம் தேதியன்று மேக விதைப்பு விமானம் மூலம் வடமேற்கு டில்லியில் ஐந்து இடங்களில் முதன்முறையாக செயற்கை மழை சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
26-Sep-2025