உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதியை பதவி நீக்க கோருவது மிரட்டி பணிய வைக்கும் முயற்சி

நீதிபதியை பதவி நீக்க கோருவது மிரட்டி பணிய வைக்கும் முயற்சி

ஜபல்பூர்: “சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க கோருவது அரசியல் உள்நோக்கம் கொண்டது. தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக நீதிபதிகளை மிரட்டி பணிய வைக்கும் முயற்சி,” என, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.கே.திரிவேதி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்ற உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உச்சி பிள்ளையார் கோவில் மண்டபத்திலும், தீபத்துாணிலும் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார். இதனால், அதன் அருகே உள்ள தர்காவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார். எனினும், தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேலும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கும் தீர்மானத்தை கொண்டுவரக் கோரி, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் வழங்கினர். தி.மு.க., - எம்.பி.,க்களின் இந்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்ற மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் 56 பேர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.கே.திரிவேதி கூறியதாவது

இந்த விவகாரம், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது, நீதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மானம் கொண்ட வர முயற்சிப்பது முற்றிலும் தவறானது. அரசியல் உள்நோக்கத்துடன் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதற்காக, நீதிபதிகளை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியாகவே இது தெரிகிறது. நீதித்துறையின் மாண்பை கெடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி தவிர்க்கப்பட வேண்டும். இதனால், நம் நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்து விடும். ஒரு நீதிபதி பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலோ, திறனற்றவராக இருந்தாலோ மட்டுமே, அரசியல் சாசனத்தின்படி அவரை பதவியில் இருந்து நீக்க தீர்மானம் கொண்டு வர முடியும். அவ்வாறு இருக்க, நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக எப்படி பதவி நீக்கம் கோரும் தீர்மானம் கொண்டுவர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

திகழ்ஓவியன்
டிச 16, 2025 12:08

மத நலிகிணத்திர்காக இப்படி செய்தால் தான் என்ன அரசு மக்களுக்ககா தான்


Ajrjunan
டிச 16, 2025 08:58

ஓருதலை பட்சமாக தீர்ப்பு வழங்கினால் அவர் அநீதிபதி.


VENKATASUBRAMANIAN
டிச 16, 2025 08:32

காங்கிரஸ் திமுக எதையும் செய்யும்.


G Mahalingam
டிச 16, 2025 07:55

திமுக என்றாலே ரவுடி கட்சி என்றுதான் தெரிந்தும் கூட்டணி மூலமே வெற்றி பெற்றார்கள். தனியாக நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது.


ram
டிச 16, 2025 06:57

திருட்டு திராவிடத்தின் இந்த அராஜகப்போக்கு ...ஒரு நீதிபதிக்கே இந்த நிலமைன்னா... சாதாரன மக்கள்..


raja
டிச 16, 2025 06:13

ஒத்த தோலக்குடன் திருட்டு இரயில் ஏறி வந்து தமிழனை கொள்ளை அடிக்கும் ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டத்தை தமிழன் அடித்து விரட்டினாலே இது எல்லாம் தானா அடங்கும்....


Priyan Vadanad
டிச 16, 2025 05:53

ஒருதலையாய் இருந்தால் தறுதலை நிகழ்ச்சிகள் நடக்கும்.. சமுதாய ஒற்றுமையை விரும்பாத தீய சக்திகளிடம் கூட்டு சேர்ந்தாலோ அல்லது சக மனிதர்களின் மரியாதைக்கும் மாண்புக்கும் எதிரான சித்தாந்தங்களை மண்டைக்குள் ஏற்றி வைத்திருந்தாலோ நல்லதாய் எதுவும் நடக்குமோ


பேசும் தமிழன்
டிச 16, 2025 07:37

இண்டி கூட்டணி ஆட்கள் கூட்டணி வைத்து இருப்பது எல்லாம் தேச விரோத சக்திகளுடன் தான்..... பிறகு அவர்களது நடத்தை எப்படி இருக்கும் ??


Mani . V
டிச 16, 2025 05:04

ரௌடிகளின் ஆட்சியில் இதெல்லாம் நடக்காமல் இருக்குமா யுவர் ஹானர்?


Ajrjunan
டிச 16, 2025 09:04

நீதிபதி தன் கடமையை மதவாத கும்பலுக்கு சாதகமாக செய்தால் அவரை கருட புராணத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும்.


Kasimani Baskaran
டிச 16, 2025 03:42

திராவிட தீய சக்திகள் அப்படிதான் இயங்கும். 2ஜி வழக்கில் அப்படித்தான் நீதிபெறறார்கள் போலும். பொதுவாகவே எந்த விசாரணை அமைப்பும் தீம்க்காவினர்களை கேள்வி கேட்கவே கூடாது என்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை