உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயகமும், அரசியலமைப்பு சட்டமும் நொறுக்கப்படுகின்றன: ஆம்ஆத்மி காட்டம்

ஜனநாயகமும், அரசியலமைப்பு சட்டமும் நொறுக்கப்படுகின்றன: ஆம்ஆத்மி காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி ஆட்சியில் நாடு முழுவதும் அரசியலமைப்பு சட்டமும், ஜனநாயகமும் நொறுக்கப்படுகின்றன என ஆம்ஆத்மி எம்.பி., சஞ்சய் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உச்சநீதிமன்றத்தால் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட இருந்த நிலையில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ளார். மோடியின் சர்வாதிகார ஆட்சியில், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்துவதற்கு எடுத்துக்காட்டு கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளது தான்.கெஜ்ரிவாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அரசு எழுதிக் கொடுத்து ஜனாதிபதி ஆற்றிய உரையில் ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் குறித்து பெரிதாக பேசப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் நாடு முழுவதும் அரசியலமைப்பு சட்டமும், ஜனநாயகமும் நொறுக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

R.Varadarajan
ஜூன் 30, 2024 18:33

ஊழலை ஒழிக்கவே அவதாரம் எடுத்ததாக குரைத்துக்கொண்டு கோணங்கி கட்சியை எதிர்த்து அரசியலில் காலடி வைத்த பரம யோக்கியர் இன்று ஊழலின் ஊற்றுக்கண்ணாக் மாறி ஊருக்கு உபதேசம் செய்துகொண்டு மைய அரசை எதிர்த்து எண்ணையில் விழுந்த அப்பம் போல கொதிக்கின்றார் அல்லக்கைகளின் துணையுடன் இவர்கள் கொள்ளை அடிப்பதை கண்டும் காணாமல் இருக்கவேண்டும் என நினைக்கின்றனர்


தமிழ்வேள்
ஜூன் 27, 2024 20:02

திருட்டுக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகள் சர்வாதிகாரம்......நோபல் பரிசு வழங்கப்பட வேண்டிய கருத்து..... நல்ல கட்சி.. அதற்கு பொருத்தமான சின்னம்....வெளக்கமாறு...


GMM
ஜூன் 27, 2024 17:35

அமலாக்க சம்மன் பெற மறுப்பு. செல் போன் உடைப்பு. நீதிமன்ற விசாரணை செல் போனில் ஆம் ஆத்மி பதிவு. சமூக வலைத்தளங்களில் வெளியீடு. பல கோடிகளில் மதுபான ஊழல் பண பரிவர்த்தனை? ஊழலுக்கு ஆதாரம் இல்லாமல் எந்த நீதிமன்றமும் தண்டிக்காது. ஜனநாயகத்தை நொறுக்கி வருவது ஆம் ஆத்மி. ஜனநாயகம் காக்க ராஜினாமா செய்ய வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 15:52

காந்தியவாதி அண்ணா ஹஸாரே போராட்டத்தின் மூலம் பதவிக்கு வந்துவிட்டு காந்தி எதிர்த்த மதுவில் கூட ஊழல் செய்தவர்கள் இது போல பேசுவது நகைச்சுவை.


R.MURALIKRISHNAN
ஜூன் 27, 2024 15:46

தான் எவ்வளவு ஆதரவு


சிந்தனை
ஜூன் 27, 2024 15:16

எங்களைத் திருடச் சொல்லி தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள்... இது ஜனநாயக நாடு... மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய நாங்கள் திருடுவதை அனுமதிக்காத மத்திய அரசு, எங்களை கொடுமை செய்கிறது...


தத்வமசி
ஜூன் 27, 2024 15:14

எது ? தில்லியில் ஏழு இடங்களையும் பிஜேபி வென்றதை சொல்கிறீர்களா ? உங்களின் தலைவரின் கைதை சொல்கிறீர்களா ? பல கோடிக்கு அவரது வீட்டை புதுப்பித்த போது அவரை கேள்வி கேட்டிருக்க வேண்டும். பல ஐபோன் வாங்கி அவற்றை உடைத்து எரியும் போது கேட்டிருக்க வேண்டும்.


Balaji Radhakrishnan
ஜூன் 27, 2024 14:41

ஊழலில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் கொண்ட கட்சி ரொம்ப யோக்கியமா பேசுறார்


Mettai* Tamil
ஜூன் 27, 2024 14:40

ஊழல் , கொள்ளைக்கும்பல் தண்டிக்க பட்டால் ஜனநாயகத்தை இழுப்பதா .............


S.Bala
ஜூன் 27, 2024 14:40

திருடர்களை கொண்டாடடும் ஆம் ஆத்மி கட்சி. இதற்கு காங்கிரஸ் உடந்தை . இரண்டு ஊழல் முதல்வர்கள் கைது செய்து சிறையில் அடைத்தால் எமெர்ஜென்சி என்று குரலிடும் காங்கிரஸ் .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை