உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குற்றம் சாட்டப்படுவோர் வீடு இடிப்பு; விதிமுறை ஏற்படுத்த சுப்ரீம் கோர்ட் உறுதி

குற்றம் சாட்டப்படுவோர் வீடு இடிப்பு; விதிமுறை ஏற்படுத்த சுப்ரீம் கோர்ட் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குற்றம் சாட்டப்படுவோர் வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், நாடு முழுவதும் பொருந்தும் வகையிலான விதிமுறைகளை வகுக்கப் போவதாக கூறியுள்ளது.வன்முறை, கலவரம், குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்படுவோரின் வீடுகளை புல்டோசர் வாயிலாக இடிக்கும் நடவடிக்கை டில்லி ஷாஜகான்பூரில் துவங்கியது. பிறகு உத்தர பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் இதுபோன்று புல்டோசர் வாயிலாக வீடுகள் இடிக்கப்படுவது தொடர்ந்தது. இதை தடுத்து நிறுத்தும்படி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தவிர, பல தனிநபர்களும் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. கடந்த செப்., 17 அன்று விசாரணைக்கு வந்த போது, புல்டோசர் நடவடிக்கையை தொடர அக்., 1 வரை தடை விதித்தனர்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கூறியதாவது: ஒருவர் குற்றம் சாட்டப்பட்டார் அல்லது குற்றவாளி என்பது மட்டும் இடிப்புக்கான காரணமாக கூற முடியாது. குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக மட்டும் தனிப்பட்ட சட்டங்கள் இருக்க முடியாது. பொது சாலைகள், அரசு நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானத்தை நாங்கள் பாதுகாக்க மாட்டோம்.எங்கள் உத்தரவு எந்த பொது இடத்திலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவாது என்பதை நாங்கள் உறுதி செய்வோம். இந்திய மதசார்பற்ற நாடு. சுப்ரீம் கோர்ட் விதிக்கும் விதிமுறைகள், அனைத்து சமூகத்திற்கும் பொருந்துவதாக இருக்கும் எனக்கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Ramesh
அக் 02, 2024 08:04

நேர்மையாக வாழும் மக்களுக்கு எதிரானது நீதி மன்றங்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகிவிட்டது.


Kasimani Baskaran
அக் 02, 2024 05:45

ஒருவர் தீவிர குற்றச்செயல்களில் ஈடுபடும் பொழுது ஆக்கிரமித்து கட்டப்பட்ட அவர்களின் சொத்துக்களை இடிப்பதில் என்ன தவறு? வேண்டுமானால் நீதிமன்றம் ஒவ்வொரு குற்றவாளிக்கு தனிப்பட்ட ஆணைகளை பிறப்பித்து இன்னார் குற்றச்செயலில் ஈடுபட்டார். அவர்களது ஆக்கிரமித்து கட்டப்பட்ட சொத்துக்களை மீட்க நீதிமன்றம் எதிர்ப்பு மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கிறது என்று போர்டு மாட்டி வைக்கலாம்.


GMM
அக் 01, 2024 22:39

வன்முறை, கலவரம், குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோர் வீடுகள் இடிப்பு தவறா? விலைகொடுத்து வாங்கிய வீட்டில் வசிப்போர் வன்முறை, கலவரம் செய்ய போவது இல்லை. அடையாள படுத்த முடியாதவர் ஆக்கிரமித்து இருப்பதால் அகற்றவேண்டும். நீங்கள் கூறும் மதத்தினரின் சட்ட பூர்வ இடத்தை எட்டிக்கூட பார்க்க முடியாது. இடித்தால் இழப்பீடு பெறாமல் விட மாட்டார்கள். வழக்கறிஞர் வாதம் உண்மை தகவல் தராது. எந்த மாநில நிர்வாகமும் துவக்கம் முதல் நில பரிவர்த்தனை விவரம் பதிவது கிடையாது. ஏன்?


narayanansagmailcom
அக் 01, 2024 21:53

குற்ற செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் வீடுகளை உடனே இடிக்க வேண்டும். அவர்களுக்கு மேல் முறையீடு சந்தர்ப்பம் அழிக்க கூடாது. அப்படி செய்தால் தான் மற்றவர்கள் குற்ற செயல் செய்ய மாட்டார்கள். அந்த நபரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வாழ்வு தர ஆவண செய்ய வேண்டும்


GMM
அக் 01, 2024 21:45

குறிப்பிட்ட மதத்திற்கு தனிபட்ட சட்டம் இருக்கமுடியாது. அப்போ சிறுபான்மை அந்தஸ்து சட்டவிதி செல்லாது. ? விதிகள் வகுத்து, அமுல்படுத்துவது அரசு நிர்வாகம். உச்ச நீதிமன்றம் அமுல்படுத்த முடியாது. கூடாது. தனக்கு கிரயம் ஆகாத நிலத்தில் , இடத்தில் வீடுகட்டி குடியிருப்பது சட்ட விரோதம். இதில், சாதி, மத, ஏழ்மைக்கு இடம் மன்றம் கொடுக்க அதிகாரம் இல்லை. நில வழக்கை நீதிமன்றம் தன் வசம் எடுக்கும் போது, நீண்டகால வழக்காக மாற்றப்பட்டு, இறுதி காலம் வரை போராடி, வீதியில் மாண்டு கிடக்க போகும் குடிமக்கள் ஏராளம். அதில் எங்கள் குடும்பத்தினர் அடங்கும். தயவுசெய்து ஆக்கிரமிப்பை நீதிமன்றம் ஊக்க படுத்த வேண்டாம். பலருக்கு முழு வாழ்க்கையும் வழக்கில் கழிந்து வருகிறது.


bgm
அக் 01, 2024 20:54

ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக சட்டம் இயற்ற முடியாது... அப்போ எதுக்கு முத்தாலிக், வாரிய சொத்து...பொது சிவில் சட்டம் எங்கே?


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 01, 2024 20:43

வீடுகளை இடிக்க வேண்டாம் .... எங்களுக்கு ஷரியத் படி தண்டனை கொடுங்கள் என்று அமைதி மார்க்கத்தினர் சொல்வார்களா ??


venugopal s
அக் 01, 2024 20:24

மத்திய மாநில அரசுகள் தவறு செய்யும்போது அவர்களை தடுத்து நிறுத்தி நியாயத்தை நிலை நாட்டும் உச்ச நீதிமன்றத்துக்கு பாராட்டுகள்!


rasaa
அக் 01, 2024 20:18

நீதி விலை போய் பல காலமாகிவிட்டது. பணம், பதவி, ஆள் பலம் உள்ளவர்களுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த சட்டம். காரணம் இல்லாமலா ஜாதி, மதம், அரசியல்வாதிகள் அம்பேத்கரை கொண்டாடுகின்றார்கள்.


Dharmavaan
அக் 01, 2024 19:30

நாட்டை நீதிமன்றங்கள் நடத்தலாம்.சட்டம் இயற்றுவது பாராளு மன்றத்தின் வேலை. கோர்ட் அல்ல ,மோடி துணிந்து கொலீஜியத்தை நீக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை