உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேகதாது திட்டம் செயல்படுத்தப்படும் துணை முதல்வர் சிவகுமார் உறுதி

மேகதாது திட்டம் செயல்படுத்தப்படும் துணை முதல்வர் சிவகுமார் உறுதி

மைசூரு; ''காங்கிரஸ் ஆட்சியிலேயே, மேகதாது திட்டத்தை செயல்படுத்துவோம், என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:மேகதாது திட்டத்தை பற்றி, காங்கிரஸ் அரசு ஆலோசிக்கவில்லை என, முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார். இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மிகவும் நெருக்கமானவர். பிரதமரிடம் பேசி மேகதாது திட்டத்துக்கு, அனுமதி பெற்றுத்தர வேண்டும். காங்கிரஸ் அரசு இருக்கும் போதே, மேகதாது திட்டம் செயல்படுத்தப்படும்.காவிரி ஆறு நமது தாய், அந்த தாயின் கருணையால் நாம் வாழ்கிறோம். கர்நாடகாவில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்டு சென்ற 25 பா.ஜ., - எம்.பி.,க்கள்., மாநிலத்துக்கு ஆதரவாக பேசுவதில்லை. எம்.பி., பிரதாப் சிம்ஹா, பிரதமரிடம் கேட்டு மேகதாது திட்டத்துக்கு அனுமதி பெற்று தரலாமே. ஆனால் யாரும் குரல் எழுப்பவில்லை.மேகதாது திட்டத்தால், மூழ்கும் வனப்பகுதிகளுக்கு பதிலாக, வருவாய்த்துறை நிலங்கள், வனத்துறைக்கு கைமாற்றப்படும். சாம்ராஜ்நகர், மாண்டியா, மைசூரு, பெங்களூரு ரூரல் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மரங்கள் கணக்கெடுப்பு நடத்தும்படி, வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தவிடப்பட்டுள்ளது.உழுபவனே நிலத்தின் உரிமையாளர் சட்டத்தை செயல்படுத்திய காங்கிரஸ், எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக பணியாற்றும். விவசாயிகளுக்கு ஊதியம், இடமாற்றம், பதவி உயர்வு, ஓய்வூதியம் உட்பட எந்த சலுகைகளும் இல்லை. எனவே விவசாயிகளுக்கு ஆதரவாக, அரசு நிற்கும்.விவசாயிகள் முன்னேற்றத்துக்காக, முதல்வர் சித்தராமையா தலைமையில், நான், அமைச்சர்கள் மகாதேவப்பா, போஸ்ராஜ் உட்பட அனைவரும் உழைக்கிறோம். விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்க, அமைச்சர் வெங்கடேஷ் பல கோரிக்கைகள் வைத்துள்ளார். விவசாயிகள் நலனுக்காக எங்கள் அரசு பணியாற்றும்.கொடுத்த வாக்குறுதிப்படி, ஐந்து திட்டங்களை செயல்படுத்தினோம். பா.ஜ., - ம.ஜ.த.,வினர் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். இந்த கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை. ஐந்து விரல்கள் சேர்ந்து, கை முஷ்டியானது. ஐந்து திட்டங்கள் சேர்ந்து, காங்கிரஸ் கெட்டியானது. எங்கள் சக்தியை கண்டு, தாமரை உதிர்ந்து போனது. எங்களின் வாக்குறுதி திட்டங்களால், கர்நாடகா வளமாகியுள்ளது. காங்கிரசின் வாக்குறுதி திட்டங்களை பிரதமர் மோடி விமர்சித்தார். கர்நாடகா திவால் ஆகும் என்றார். இப்போது, அவர்களும் எங்களின் திட்டங்களின் பின்னால் செல்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை