உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை கலெக்டர் தற்கொலை; மார்க்சிஸ்ட் பெண் தலைவர் கைது!

துணை கலெக்டர் தற்கொலை; மார்க்சிஸ்ட் பெண் தலைவர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கண்ணனூர் மாவட்ட துணை கலெக்டர் நவீன் பாபு தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார், பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தற்கொலைக்கு தூண்டியதாக மார்க்சிஸ்ட் பெண் தலைவர் திவ்யாவை கைது செய்தனர். முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி கேரளாவில் நடக்கிறது. இங்குள்ள கண்ணனூர் மாவட்டத்தில், மாவட்ட பஞ்சாயத்து தலைவராக ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகராக திவ்யா பதவி வகிக்கிறார். இந்த மாவட்டத்தில் துணை கலெக்டராக பணியாற்றியவர் நவீன் பாபு. இவர், பதவி உயர்வு பெற்று பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு செல்ல இருந்தார். இதை முன்னிட்டு கேரள அரசு ஊழியர்கள் சார்பில் நவீன் பாபுவுக்கு பிரிவு உபசார விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..விழாவில் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அந்த விழாவில், எந்த அழைப்பும் இன்றி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யாவும் கலந்து கொண்டார். அங்கு பலர் முன்னிலையில், துணை கலெக்டர் நவீன் பாபுவை அவதூறாக பேசினார். அவர் மீது லஞ்ச குற்றச்சாட்டுகளை சுமத்தினார். சக அரசு ஊழியர்கள், உயர் அதிகாரிகள் முன்னிலையில் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்த துணை கலெக்டர் நவீன் பாபு, அன்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரளா அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யாவின் அவதூறான குற்றச்சாட்டுகளால் மனம் உடைந்த நேர்மையான அதிகாரி நவீன் பாபு தற்கொலை செய்து கொண்டதாக அரசு ஊழியர்கள் கொந்தளித்தனர். இந்நிலையில் விசாரணை நடத்திய போலீசார், நவீன் பாபுவை தற்கொலைக்கு தூண்டியதாக, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யாவை இன்று (அக்.,29) கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவரை, மருத்துவ பரிசோதனைக்கு பின் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

R. John
நவ 01, 2024 21:26

ஒரு துணை கலெக்டருக்கு மனஉறுதி வேண்டாமா? எதையும் தாங்கும் மன வலிமை உயர செல்லச்செல்ல அதிகம் தேவை அல்லவா


Sheik Nawfal
அக் 31, 2024 18:11

திவ்யா ஓரு நேர்மையான அரசியல்வாதி.. நவீன் பாபு ஓரு லஞ்ச பேர்வழி. கூட்டிக் கொடுத்து பத்திரிக்கை ஆரம்பித்து நடத்துபவனுக்கு உண்மையை விசாரித்து எழுத தெரியாது..


SVR
அக் 30, 2024 15:33

எனது அறியா வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். அதற்கு எனக்கு கிடைத்த பதில் என்னவென்றால் முன்னது கூறைக்கு நெருப்பு வைப்பவர்கள் என்றும் பின்னது கழுத்தை அறுப்பவர்கள் என்றும் சொல்லப்பட்டது. அது எவவளவு உண்மை என்று இந்த செய்தியும் நிரூபித்திருக்கிறது மறுபடியும். வாழ்க இவர்களின் அட்டகாசம். வளர்க இவர்களின் ஆட்சி.


நிக்கோல்தாம்சன்
அக் 30, 2024 05:46

இடதுசாரி திவ்யா போன்றவர்கள் ஒரு கலெக்டரையே இவ்வளவு தூரம் செய்துள்ளாள் எவ்வளவு பொதுமக்களை சப்த்தம் இல்லாம செய்திருப்பார்கள் ? புத்தியும் இடதுசாரி தானோ?


xyzabc
அக் 30, 2024 02:26

தி மு க வினர் பரவா இல்லையோ ?


Easwar Kamal
அக் 29, 2024 22:38

பெண்களில் சில நல்லவர்களும் உண்டு இந்த பெண்மணி போன்று ஆணவம் பிடித்த பெண்களும் உள்ளனர். இதை மாதிரி பெண்களினால் பல கணவன்மார்கள் மரணித்தும் உள்ளனர்.


சிந்தனை
அக் 29, 2024 22:16

கம்யூனிஸ்டுகளின் திமிறுக்கும் அராஜகத்திற்கும் அளவே இல்லை


ஆரூர் ரங்
அக் 29, 2024 21:35

செ. பா மாதிரி சிறையில் ஜாலியாக இருக்கலாம்.. சொந்த ஆட்சிதானே?


M Ramachandran
அக் 29, 2024 21:24

கேரளாவில் ,இந்த போலீசு ஓரளவுக்கு நேர்மையுடன் நடந்து கொண்டது. இங்கு என்றால் திருமணமாகி இருந்தாலும் காதல் தோல்வியால் தற்கொலை என்று கேசு முடிந்திருக்கும். அது தான் நம் தமிழகம்


Rpalnivelu
அக் 30, 2024 07:09

//காதல் தோல்வியால் தற்கொலை என்று கேசு முடிந்திருக்கும். அது தான் நம் தமிழகம்// ஓர் சிறு திருத்தும் அது தான் நம் தமிழகம் என்பதற்கு பதில் அது தான் நம் தமிழகம்// ஓர் சிறு திருத்தும் அதுதான் த்ரவிஷா மாடல்


Ramesh Sargam
அக் 29, 2024 21:21

இந்த சம்பவம் நடந்து சில வாரங்கள் ஆகிய நிலையில், இன்றைக்கு கைது. இந்நேரம் அவர் தனக்கு எதிரான எல்லா சாட்சியங்களையும் அழித்து இருப்பார். சாட்சியம் இல்லாமல் நீதிமன்றம் அவரை தண்டிக்கமுடியாது. கைது செய்து என்னபயன்? காதில் பூ சொருகும் வேலை இந்த கைது நடவடிக்கை.


சமீபத்திய செய்தி