உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தோப்புக்கரணம் போட்ட துணை கலெக்டர்: பணியின் முதல் நாளிலேயே அதிரடி

தோப்புக்கரணம் போட்ட துணை கலெக்டர்: பணியின் முதல் நாளிலேயே அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஷாஜஹான்பூர்: உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் துணை கலெக்டராக பொறுப்பேற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, முதல் நாளிலேயே அதிரடியான நடவடிக்கை மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ரிங்கு சிங் ரஹி, நேற்று முன்தினம் ஷாஜஹான்பூர் துணை கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். அலுவலக பணிகளை மேற்கொள்வதற்கு முன், தன் அலுவலகம் துாய்மையாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றி வந்தார். அப்போது, பலர் தங்கள் இயற்கை உபாதைகளுக்கு கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவர்களை பயன்படுத்தியிருந்தது கண்கூடாக தெரிந்தது. தவிர, கலெக்டர் அலுவலக குமாஸ்தாவும், துாய்மையை பற்றி கவலைப்படாமல் பொது வெளியில் இருக்கும் அந்த சுற்றுச்சுவரை இயற்கை உபாதைக்காக பயன் படுத்திக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த துணை கலெக்டர் ரிங்கு, உடனடியாக அவரை அருகே அழைத்து தோப்புக்கரணம் போட வைத்தார். இது பற்றி அறிந்ததும் கலெக்டர் அலுவலகத்திற்குள் குவிந்த வழக்கறிஞர்கள், தோப்புக்கரணம் போட வைத்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை கலெக்டர் சமாதானம் செய்ய சென்றபோது, 'ஒட்டுமொத்த கலெக்டர் அலுவலக வளாகமும் சுத்தம் இல்லாமல் இருக்கிறது. அதற்கு நீங்கள் பொறுப்பேற்று தோப்புக்கரணம் போடுவீர்களா?' என வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர். அடுத்த விநாடியே, ரிங்கு சிங், அனைவரது முன்னிலையிலும் தோப்புக்கரணம் போட்டு, நிர்வாகத்தில் ஏற்பட்ட குறைகளுக்காக மன்னிப்பு கேட்டார். துணை கலெக்டரின் இந்த செயலை சற்றும் எதிர்பாராத வழக்கறிஞர்கள், உடனடியாக தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கலெக்டர் அலுவலகத்தின் துாய்மைக்கு பொறுப்பேற்று, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ரிங்கு சிங் தோப்புக்கரணம் போட்ட 'வீடியோ' சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Ram pollachi
ஜூலை 31, 2025 15:35

நாட்டில் பெரும்பாலான நபர்களுக்கு நீரழிவு நோய், சிறுநீரகம் பாதிக்கு பாதி தான் வேலை செய்கிறது. பலருக்கு சிறுநீர் வெளியேறுவது கூட தெரியவில்லை. சந்து பொந்து, கரன்ட் கம்பம், லாரிக்கு பின்னாடி முன்னாடி எங்க கேப் கிடைத்தாலும் அம்மாடியோ!


Ram pollachi
ஜூலை 31, 2025 15:31

நாத்தம்


c.mohanraj raj
ஜூலை 31, 2025 13:23

இதுவே திராவிட மாடலாக இருந்தால் எவனும் பேச முடியுமா


Rathna
ஜூலை 31, 2025 11:39

உண்மையை சொன்னால் இந்தியர்கள் சுகாதாரத்தில் மிகவும் மோசம். வட நாடு பீட வாயர்களால், சுகாதாரமற்ற மக்களால் சூழப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் படிப்பறிவு இன்மை. தமிழ்நாடு எவ்வளவோ மேல். ஆனால் இது மாறுகிறது. ஆறுதல் அளிக்க வேண்டிய செய்தி, பல கிராமங்களில், நகரங்களில் வெளியில் கழிப்பிடமாக பயன்படுத்துவது கடந்த பத்து ஆண்டுகளில் மிகவும் குறைந்து உள்ளது. பொது சுகாதாரம் மேம்பட்டு உள்ளது. அதற்கு ஒரு மிக பெரிய காரணம் மத்திய அரசின் ஸ்வட்ச் பாரத் திட்டம்.


PR Makudeswaran
ஜூலை 31, 2025 11:01

மோடி மேல் குற்றம் சொல்வது தான் குறி??உங்கள் மனப்பான்மை புரிகிறது அசுத்தம் செய்த மக்களை கண்டித்து எழுத தைரியம் இல்லை. ஏனென்றால் அது இனம் . இனம் இனத்தோடு தான் சேரும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 31, 2025 10:36

சம்பத் அவர்களே, அவரது கருத்து நியாயமானதுதான். ஒரு தெரு குப்பையை அள்ளி அடுத்த தெருவில் கொட்டி மந்திரிகள் குப்பை அள்ளும் காட்சி எத்தனை தொலைக்காட்சியில் ஒளி பரப்பாகின? அதுமட்டுமின்றி அரசாங்கத்திற்கு செலுத்தும் வரிகளில் குறிப்பாக வருமான வரியில் ௦.5% ஸ்வச்பாரத் க்கு தனியே வசூலித்தும் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே இப்படி என்றால் கிராமப்புற பஞ்சாயத்து அலுவலகங்களில் எப்படி இருக்கும்? ஸ்வாச்பாரத் என்ற பெயரில் வசூலித்த பல்லாயிரம் கோடிகள் கொள்ளை போனதென்பது தெளிவாகவே தெரிகிறது


VSMani
ஜூலை 31, 2025 10:15

கலெக்டர் அலுவலகத்திற்குள் குவிந்த வழக்கறிஞர்களையும் தோப்புக்கரணம் போட வைத்திருக்கவேண்டும்.


V RAMASWAMY
ஜூலை 31, 2025 09:35

இது தான் அறிவுஜீவிகளுக்கும் படித்தும் அறிவற்ற ஜீவிகளுக்குமுள்ள வித்தியாசம்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 31, 2025 09:12

அப்போ பல ஆயிரம் கோடிகள் செலவழிச்ச சுவாச் பாரத் திட்டம் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சு போச்சு.


p karuppaiah
ஜூலை 31, 2025 08:43

இவரை மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் சகோதரரே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை