உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர்களின் விபரங்கள்: தேர்தல் கமிஷன் தடை

வாக்காளர்களின் விபரங்கள்: தேர்தல் கமிஷன் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கை: சில அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சர்வே என்ற போர்வையில், தேர்தலுக்கு பிந்தைய திட்டங்களுக்காக வாக்காளர்களின் விபரங்களை பதிவு செய்வதை கவனித்துள்ளோம்.நலத்திட்டங்களுக்காக வாக்காளர்களின் விபரங்களை கோரும் விளம்பரங்கள், சர்வேக்கள், மொபைல் செயலிகள் போன்ற நடவடிக்கைகளை அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளும் உடனடியாக நிறுத்த வேண்டும்.தேர்தலுக்குப் பிந்தைய பலன்களுக்காக வாக்காளர்களிடம் தங்களின் விபரங்களை பதிவு செய்ய அழைப்பு விடுப்பது, பலன் கருதி வாக்காளர் - வேட்பாளர் இடையே உறவை ஏற்படுத்துவது போன்ற தோற்றத்தை உண்டாக்கலாம்.மேலும், இது ஓட்டு போடுவதற்காக குறிப்பிட்ட வழியில் பலனை ஏற்படுத்தி தரும் வழியை கொண்டுஉள்ளது.இதன் காரணமாக இத்திட்டம் வாக்காளர்களை குறிப்பிட்ட வேட்பாளருக்கு சாதகமாக ஓட்டு போட தூண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

thiruvazhimaruban kuttalampillai
மே 03, 2024 09:05

ஆதார் எண் அடையாளத்தோடும் யுனிக் கோடு வாக்காளர் அட்டை உருவாக்க வேண்டும்அதாவது ரேஷன் கடையில் பின்பற்றும் முறையில் வாக்கு பதிவு நாள் அன்று கை ரேகை, அல்லது விழி பதிவு முறையில் வாக்கு பதிவு செய்ய வேண்டும்


duruvasar
மே 03, 2024 07:46

டீலக்ஸ் பஸ்ஸிலும் மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டம் என்று கணக்கெடுக்கபடும் திட்டம் எடுப்பதெல்லாம் இதன் கீழ் வரும்


Kasimani Baskaran
மே 03, 2024 07:42

பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுமளவுக்கு அறிவுள்ள வாக்காளர்களை வைத்து ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது


Kundalakesi
மே 03, 2024 06:39

தேர்தல் முடிந்த பிறகு என்ன பிரச்னை


D.Ambujavalli
மே 03, 2024 06:25

இத்தகைய சர்வேக்களால் தங்கள் கட்சிக்கு ஓட்டளிக்காத தொகுதி மக்களை துன்புறுத்துவது, ஒரு நிகழ்ச்சியில் அறிந்தபடி வாக்காளரின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படுத்தலாம்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ