உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம்: டில்லி ஐகோர்ட் நீதிபதியின் மொபைல்போன் பதிவுகளை விசாரிக்க முடிவு

பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம்: டில்லி ஐகோர்ட் நீதிபதியின் மொபைல்போன் பதிவுகளை விசாரிக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்து விசாரிக்க நீதிபதிகள் குழு முடிவு செய்து உள்ளது.டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு நீதித்துறை சார்ந்த பணிகளை ஒதுக்க வேண்டாம் என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும், இது குறித்து விசாரிக்க பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல பிரதேச ஐகோர்ட் நீதிபதி ஜிஎஸ் சந்திவாலியா மற்றும் கர்நாடக ஐகோர்ட் நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர், யஷ்வந்த் வர்மா வீட்டிற்கு வந்து பணம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தவும், பணம் கைப்பற்றப்பட்ட அன்று நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரிக்கவும் 3 நீதிபதிகள் குழுவினர் முடிவு செய்துள்ளனர். பணம் கைப்பற்றப்பட்டது குறித்து அறிந்ததும், யஷ்வந்த் வர்மா யாரிடம் பேசினார்? அவருக்கு தகவல் சொன்ன நபர்கள் குறித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தீயணைப்புத்துறை தலைவரிடமும் விசாரணை நடத்த நீதிபதிகள் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

B MAADHAVAN
மார் 27, 2025 23:10

டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் அதிக அளவு பணம் கண்டுபிடிக்கப் பட்டு, இப்படிப் பட்ட பிரச்னைகள் வருமா என்று அந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா யோசித்திருக்க மாட்டார்..


Bhaskaran
மார் 27, 2025 17:41

நம்ம ஊர் ஆட்கள் வீட்டில் ரெய்டு விடனும்


Mayakannan Kannan
மார் 27, 2025 13:11

பெரியவர்கள் செய்தால் பெருமாள் செய்த மாதிரி |


Mayakannan Kannan
மார் 27, 2025 13:08

24 மணி நேரமும் அவர் வீட்டில் பாதுகாப்பு அலுவலில் இருந்த போலிசிடம் கேளுங்கள்|


Rajendran.G
மார் 27, 2025 08:25

அப்பாவிகளை குண்டு வைத்து கொல்லும் தீவிரவாதிகளிடம் ஆட்சியை கொடுப்போமா?


Selva Kumar
மார் 27, 2025 07:25

இவருடைய தீர்ப்புகள் உண்மையிலேயே வழங்கப்பட்ட தீர்ப்புகள் அல்லது வாங்கப்பட்ட தீர்ப்புகளா ? விசாரிக்கப்படவேண்டும்


Thiyagarajan S
மார் 27, 2025 07:19

படுபாவி..... இந்த காசுக்காக எத்தனை அப்பாவிகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டாரோ தெரியவில்லை..... கடுமையான தண்டிக்க வேண்டும் தண்டனை கொடுக்க வேண்டும்., இதுவரை இவர் அளித்த தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்


Suresh R
மார் 27, 2025 06:18

Justice was available during manu needhi Chozhan time. In today’s world very rare but still some honest people are there like Justice Kunha.


KANNAN R
மார் 26, 2025 21:39

ஒரு நீதிபதிக்கு 3 நீதிபதிகளா. கர்நாடகாவின் நீதிபதி ஜெயலலிதாவிற்கு வழங்கிய தீர்ப்பு ஞாபகமிருக்கா மக்களே. அது தான் இது.


KANNAN R
மார் 26, 2025 21:33

நீதிபதிக்கு ஒரு நீதிபதி தேவையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை