உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவில் விழாவில் மார்க்சிஸ்ட் கொடி: விசாரணைக்கு தேவசம் போர்டு உத்தரவு

கோவில் விழாவில் மார்க்சிஸ்ட் கொடி: விசாரணைக்கு தேவசம் போர்டு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில் கோவில் திருவிழாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கொடி பறக்கவிடப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, திருவிதாங்கூர் தேவசம் போர்டு உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோவிலில் நடந்த திருவிழாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது:கேரளாவில் கோவிலுக்குள் அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்களை காட்சிப்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.எனினும் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எப்.ஐ.,யின் கொடி பறக்கவிடப்பட்டதாகவும், அந்த கட்சியின் புகழ்பாடும் பாடல்கள் இசைக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்தது.இது தொடர்பாக விஜிலன்ஸ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்ததும் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முன்னதாக கடந்த வாரம் பெரும்பாவூர் கோவிலில் நடந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ்., நடத்திய உடற்பயிற்சியின் போது இதே நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் ஆகியவை கோவில் வளாகத்தில் இடம்பெறக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Nellai tamilan
மார் 16, 2025 12:41

கோவில் நிர்வாகத்தில் மத சார்பற்ற அரசு தலையிட கூடாது என்று சொல்வது.


Ramesh Sargam
மார் 16, 2025 12:26

தைரியமிருந்தால் மார்க்சிஸ்ட் கொடியை இஸ்லாம், கிறிஸ்துவ மத இடங்களில் பறக்கவிட்டு பாருங்கள்.


Tetra
மார் 16, 2025 07:28

இவனுங்க கோவிலுக்குள்ள அவர்களுக்கு பிடித்த வாசகத்தை எழுதி பாகிஸ்தான் கொடியும் வைப்பானுங்க


Kasimani Baskaran
மார் 16, 2025 06:28

காசேதான் கடவுளடா என்பது கம்மிகளின் கொள்கை. ஆகவே கோவிலுக்குள் புகுந்தால் அள்ளலாம் என்ற எண்ணத்தில் இப்படி செய்துவிட்டார்கள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை