| ADDED : மார் 05, 2024 07:20 AM
தார்வாட்: ''தார்வாட் தொகுதியில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு மீண்டும் சீட் வழங்க வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., மகேஷ் தெங்கினகாய் ஆதரவு தெரிவித்துள்ளார்.தார்வாட் வடக்கு, தார்வாட் தொகுதிகளில் இருந்து நான்கு முறை எம்.பி., ஆனவர் பிரஹலாத் ஜோஷி. மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சராக உள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் தார்வாட் தொகுதி 'சீட்' பெற, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் முயற்சி செய்து வருகிறார்.இதனால் பிரஹலாத் ஜோஷி உத்தர கன்னடா தொகுதியில் இருந்து போட்டியிடலாம் என்று கட்சிக்குள் கிசுகிசுக்கப்படுகிறது.இந்நிலையில், ஹூப்பள்ளி - தார்வாட் மத்திய தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., மகேஷ் தெங்கினகாயி அளித்த பேட்டி:மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தார்வாட் தொகுதி வளர்ச்சிக்காக ஏராளமான பணிகள் செய்து உள்ளார். இதனால் அவருக்கு மீண்டும் தார்வாட் 'சீட்' வழங்க வேண்டும் என்று, கட்சி மேலிடத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.சில காரணங்களால் பா.ஜ., வெளியிட்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில், கர்நாடக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை. தேர்தலில் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். ஒவ்வொரு தொகுதியிலும், இரண்டு வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். தலைவர்கள், தொண்டர்கள் கருத்துகளையும் சேகரித்து அனுப்பி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.