உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் ஜார்க்கண்டில் மட்டும் வேலை செய்ததா?

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் ஜார்க்கண்டில் மட்டும் வேலை செய்ததா?

புதுடில்லி, ''ஜார்க்கண்டில் மட்டும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்ததா?'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காங்கிரசுக்கு கேள்வி எழுப்பினார்.நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி, ராஜ்யசபாவில் நேற்று நடந்த விவாதத்தில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:தேர்தலில் தோற்றால், உடனே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை காங்., குற்றஞ்சாட்டுகிறது. தோல்வியை ஏற்காத அக்கட்சி நிர்வாகிகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது பழிபோடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

குற்றச்சாட்டு

மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் ஒரே நாளில் வெளியாகின. மஹாராஷ்டிராவில் தோல்வி அடைந்த காங்., மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை குற்றஞ்சாட்டியது. அப்படியென்றால், ஜார்க்கண்டில் மட்டும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்ததா? அங்கு எந்த பிரச்னையும் அக்கட்சிக்கு இல்லையா? இன்னும் எத்தனை நாளைக்கு தான், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை காங்., குறை கூற போகிறது? மத்தியில், 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்., நாட்டு மக்களின் நலனுக்காக அல்லாமல், ஒரு குடும்பத்தின் நலனுக்காக, 77 முறை அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்தது.

இட ஒதுக்கீடு

அதே சமயம், 16 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள பா.ஜ., 22 முறை மக்களின் நலனுக்காகவே அரசியலமைப்பில் திருத்தம் செய்தது.முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக, ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத வரம்பை காங்கிரஸ் மீறியது. தாஜா அரசியல் செய்யும் காங்கிரஸ், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக எதுவும் செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M Ramachandran
டிச 18, 2024 11:17

போதையில் தள்ளலாடும் கேவலமான அடிமை ஜென்மங்களுக்கு மேனால்மாட்டி வேலை செய்யாது காசுக்கு கூவும் ஊ டகங்கள் தான் இது போன்ற செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதைய்ய நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது


veeramani
டிச 18, 2024 10:08

அடசிரி ப்பு வரவைக்கும் ஜோக்கர்களா ..அதெப்படி சரியாக மஹாராஷ்டிராவில் மட்டும் எலெக்ட்ரோனிக் வாக்கு இயந்திரம் மக்கர் பண்ணும். ஏதாவது மந்திரம் போட்டார்களா அல்லது மாயவித்தை செய்தார்களா. ஏம்பா. அறிவிலிகளா .. கடந்த பார்லிமென்ட் தேர்தலில் வேலை செய்த மெஷின்கள் எப்படியாப்பபா உங்களுக்கு மட்டும் வேலை செய்யவில்லை என விஞ்ஞானி போல கண்டுபிடித்தீர்கள். உங்கள் அனைவரையும் மனநிலை டெஸ்ட்கள் செய்யவேண்டும்


Kasimani Baskaran
டிச 18, 2024 06:12

எதிர்க்கட்சி சென்சார் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆகையால் எதிர்க்கட்சி பிரதானமாக இருக்கும் மாநிலத்தில் மட்டும் வேலை செய்யும்.


Abhivadaye
டிச 18, 2024 05:18

ஆமா காங்கிரஸ் ஜெயிச்சா வேலை செய்யுது. பிஜேபி ஜெயிச்சா வேலை செய்யல. எதிர்கட்சிகள் மற்றும் அமெரிக்க, மேற்கத்திய வல்லரசுகளின் நிலைப்பாடு இதுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை