மேலும் செய்திகள்
தேசியம்; தலைவர்கள் பேட்டி
7 minutes ago
டில்லியில் அமித்ஷா உடன் அண்ணாமலை சந்திப்பு
5 hour(s) ago | 5
புதுடில்லி: ஊழியர்கள் பற்றாக்குறையை காரணம் கூறி, 'இண்டிகோ' நிறுவனம் தொடர்ந்து நுாற்றுக்கணக்கான விமானங்களை கடந்த மூன்று நாட்களாக ரத்து செய்து வருவதால், ஆயிரக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விமான போக்குவரத்து இயக்கு நரகம், 'இண்டிகோ' அதிகாரிகளை அழைத்து நேற்று விளக்கம் கேட்டது. எதிர்ப்பு எப்.டி.டி.எல்., எனப்படும் விமான பணிநேர கட்டுப்பாட்டு விதிகள், ஜூலையில் துவங்கி நவம்பர் வரை இரண்டு கட்டங்களாக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த விதிப்படி விமானி மற்றும் விமானத்தின் பிற ஊழியர்களுக்கு, வாரத்தில் 48 மணி நேர ஓய்வு வழங்க வேண்டும். இரவில் இரண்டு முறை மட்டுமே ஒரு விமானி தரையிறங்க அனுமதி. முன்னர் இது ஆறு முறையாக இருந்தது. இதை செயல்படுத்துவதற்கு, 'இண்டிகோ' மற்றும் 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் டில்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விமான பணிகளுக்கான நேர கட்டுப்பாடு அமலுக்கு வந்தது. 'இண்டிகோ' நிறுவனம் தினசரி, 2,200 உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான பயண சேவைகளை வழங்குகிறது. இந்த விதியால் கடும் ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொண்டு இருப்பதாகவும், மேலும் தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை போன்றவையும் இணைந்து சிக்கலை அதிகப்படுத்தி உள்ளதாகவும் விளக்கம் அளித்தது. குறித்த நேரத்தில் விமானத்தை இயக்குவதற்கான குறியீட்டில் சாதாரணமாக, 'இண்டிகோ' நிறுவனம், 80 சதவீத புள்ளிகளுக்கு மேல் பெறும். நேற்று முன் தினம் அது, 35 சதவீதமாக சரிந்தது. அதாவது, 65 சதவீத விமானங்கள் தாமதமாகின அல்லது ரத்து செய்யப்பட்டன. சென்னை, டில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இண்டிகோ பயணியர் தங்களது விமானம் குறித்த தகவல் கிடைக்காமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். குற்றச்சாட்டு நு ாற்றுக்கணக்கான பயணியர் பாதிக்கப்படுவதால், இந்த விஷயத்தில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நேற்று தலையிட்டு, 'இண்டிகோ' நிறுவன அதிகாரிகளை அழைத்து , ரத்து மற்றும் தாமதத்திற்கான காரணம் கேட்டது. இது குறித்த அறிக்கை விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கப்படும். அவர்கள், 'இண்டிகோ' மீது நடவடிக்கை எடுப்பர் என அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு, 'இண்டிகோ' நிறுவனமே முழுதும் காரணம் என, விமானிகள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: இ ண்டிகோவின் நெருக்கடி திடீரென நிகழ்ந்ததல்ல. பல மாதங்களாக நடந்து வரும் நிர்வாக தோல்வியின் விளைவு இது. இந்த நெருக்கடிக்கு உண்மையான காரணம், விமான பணிகளுக்கான கட்டுப்பாட்டு விதிகள் மட்டும் இல்லை. புதிய விதிகள் அமலாக இருப்பது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விமான நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், 'இண்டிகோ' அதற்கு ஏற்ப ஊழியர்களை அதிகப்படுத்தவில்லை. இரண்டு ஆண்டுகளாக விமானிகளையும் வேலைக் கு எடுக்க வில்லை. விடுப்பில் செல்லும் விமானிக்கு கூட, மாற்று விமானியை நியமிக்க முடியாமல் தவிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இண்டிகோ விமான சேவையில் ஏற் பட்ட நெருக்கடி மூன்றாவது நாளாக நேற்றும் நீடித்தது. நேற்று மட்டும் நாடு முழுதும், 550- 'இண்டிகோ' விமானங்கள் ரத்து செய்யப் பட்டன. டில்லியில் 172; மும்பையில் 118; ஹைதராபாத் 75; பெங்களூரில் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணியர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும், தாமதம் காரணமாக பயண அட்டவணைகள் முற்றிலும் குழப்பமாக மாறியது. குறித்த நேரத்தில் விமானங்கள் இயக்கப்படுவதற்கான அளவீட்டில், 'இண்டிகோ' நேற்று 19 சதவீத புள்ளிகளை மட்டுமே பெற்றது. சென்னையில் நேற்று அதிகாலை 1:00 மணியிலிருந்து பகல் 2:00 மணி வரையிலான 14 மணி நேரத்தில், 105 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அதில், ரத்தான விமானங்களின் எண்ணிக்கை 54; தாமதமான விமானங்களின் எண்ணிக்கை 51.
இண்டிகோ நிறுவனத்தின் பயணியர் அனுபவம் தொடர்பான சர்வே, 'லோக்கல் சர்க்கிள்ஸ்' தளத்தில் சமீபத்தில் வெளியானது. இதில் நாடு முழுதும் உள்ள 301 மாவட்டங்களில் இருந்து, 15,938 பயணியர் பங்கேற்றனர். அவர்களில், 54 சதவீதம் பேர் இந்த ஆண்டு முழுக்கவே, 'இண்டிகோ' விமானங்கள் சரியான நேரத்தில் இயங்கவில்லை என கூறியுள்ளனர். தாமதங்கள் மற்றும் மாற்றங்கள் பற்றிய தகவல் வெளிப்படையாக, 'இண்டிகோ'வால் வழங்கப்படவில்லை என, 45 சதவீத பயணியர் கூறியுள்ளனர்.
7 minutes ago
5 hour(s) ago | 5