உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிமன்றங்களில் அசுத்தமான கழிப்பறை அடிப்படை உரிமையை மீறுவதாகும் உச்ச நீதிமன்ற அறிக்கையில் தகவல்

நீதிமன்றங்களில் அசுத்தமான கழிப்பறை அடிப்படை உரிமையை மீறுவதாகும் உச்ச நீதிமன்ற அறிக்கையில் தகவல்

புதுடில்லி: 'நாடு முழுதும் நீதிமன்ற வளாகங்களில் சுகாதாரமற்ற கழிப்பறைகள் இருப்பது, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கு தொடுப்பவர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட, அனைத்து தரப்பினரின் அடிப்படை உரிமை மற்றும் கண்ணியத்தை மீறும் செயல்' என, உயர் நீதிமன்றங்களின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுதும் நீதிமன்றங்களில் சுகாதாரமற்ற கழிப்பறைகள் இருப்பதாகவும், அவற்றை துாய்மைப்படுத்தக் கோரியும் வழக்கறிஞர் ராஜீப் கலிதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சுத்தமான பொது கழிப்பறை இருப்பது மாநில அரசுகளின் கடமை என்றும், அந்த வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஜன., 15ல் உத்தரவிட்டது. மேலும், நாட்டில் உள்ள நீதிமன்ற வளாகங்களில், ஆண், பெண், மாற்றுத்திறனாளி மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு தனித்தனி கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவும் நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, பல உயர் நீதிமன்றங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுதும் நீதிமன்ற வளாகங்களில் சுகாதாரமற்ற கழிப்பறைகள் இருப்பது, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கு தொடுப்பவர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மீறும் செயல். தலைநகரங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் கூட கழிப்பறைகளின் நிலை மிக மோசமாக உள்ளது. நிதி ஒதுக்கீடு, பராமரிப்பு ஒப்பந்தங்களை அமல்படுத்துதலில் உள்ள நிர்வாக தோல்வியையே இது காட்டுகிறது. மேலும், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு தனி கழிப்பறை இல்லாதது அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியத்தை புறக்கணிப்பதாகவே உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 22, 2025 20:28

அடிப்படை இந்திய அடையாளம் ஆகும்.


GMM
அக் 22, 2025 19:36

வழக்கறிஞர் சங்கம் நீதிமன்ற வளாகத்தில் டீ கடை நடத்துகிறது? வழக்கறிஞர்கள் சேவை கட்டணம் மீது சற்று கூடுதலாக வசூலித்து, கழிப்பறை பராமரிப்பது எளிது. எந்த கட்சியும் ஆண்டு முழுவதும் பராமரிக்காது. திராவிடர் கழகம் இழி தொழில் ஆக்கி விட்டது. கார் ஓட்ட, துணி துவைக்க, முடி வெட்ட, கழிப்பறை சுத்தம் செய்ய தனக்கு தானே செய்தால் தான் சம சீர். திராவிடருக்கு பிறர் வேண்டும். நாடு முழுவதும் பொது கழிப்பிட வசதி படு மோசம். நீதிமன்றத்தில் துவங்கினால் நாடு முழுவதும் மக்கள் இயக்கமாக மாறும். தமிழக மாநிலம், உள்ளாட்சி ஒரு போதும் அடங்காது. அரசு, தனியார் பஸ் நிறுத்தும் ஓட்டலின் கழிப்பறை பராமரிப்பு நன்று உள்ளது.


Rameshmoorthy
அக் 22, 2025 15:33

All government establishment toilet facilities are bad, dirty and no water supply. Hospitals, government offices and even bus stands. There is no toilets even railway stations available at few but cannot use


duruvasar
அக் 22, 2025 12:56

ஐயா மக்களுக்காக மக்களது வரிப்பணத்தில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசால் கட்டப்பட்டுள்ள ஜி ஹெச் என அழைக்கப்படும் மருத்துவ மனைகளில் உள்ள கழிப்பறைகளை ஒரு முறை பார்வையிடுங்கள்.


Rathna
அக் 22, 2025 11:16

உங்கள் லோக்பால் நீதிபதிகள் 70 லக்ஷ ரூபாய்க்கு பென்ஸ் கார் கேட்பதையும் அடிப்படை உரிமையாக சேர்த்து கொள்ளலாம். மற்ற அரசு அலுவலங்களில் உள்ள அசுத்தமான கழிபறையால் அடிப்படை உரிமை காக்கப்படும் என்பது தான் தெளிவு.


Ramesh Sargam
அக் 22, 2025 10:03

சுகாதாரமற்ற கழிப்பறைகள் நீதிமன்றங்களில் மட்டும் கிடையாது. அரசு அலுவலகங்கள், சிறைச்சாலைகள், காவல்நிலையங்களில் உள்ள குற்றவாளிகள் கழிப்பறைகள் இப்படி எங்கு பார்த்தாலும் கழிப்பறைகள் சுத்தமாக இல்லாமல் மிகவும் அசுத்தமாக இருக்கும். சொல்லப்போனால், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையத்தில் உள்ள கழிப்பறைகளும் மிகவும் அசுத்தமாக இருக்கும்.


duruvasar
அக் 22, 2025 09:41

நறுக்கு நறுக்குன்னு உங்களையே நன்றாக குட்டிக்கொள்ளுங்கள். தலைப்பு செய்தியை தவிர 10 பைசாவுக்கு பர்யோசனை கிடையாது. அது போக ஏங்க இது அடிப்படை தேவை என சொல்வதை விட்டுவிட்டு மாற்றுத்திரனாளிகள், மனித உரிமை என மேடை பேச்சு அரசியல்வாதிகள் போல் கூறுகிறீர்கள்.


VENKATASUBRAMANIAN
அக் 22, 2025 07:48

நீதிமன்றங்கள் மட்டும் அல்ல நிறைய அரசாங்க அலுவலகங்களில் இதுதான் நிலைமை. இப்போதுதான் நீதிமன்றங்களுக்கு புரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை