உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்வு எழுத வந்தவரை தாக்கிய மாவட்ட கலெக்டர்: வீடியோ வைரல்

தேர்வு எழுத வந்தவரை தாக்கிய மாவட்ட கலெக்டர்: வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: அரசு பணியாளர் தேர்வில் வினாத்தாள் கசிவானதாக புகார் கொடுக்க வந்த தேர்வர்கள் மீது மாவட்ட கலெக்டர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.பீஹாரில் பி.பி.எஸ்.சி. எனப்படும் பீஹார் அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை இன்று( டிச.,13) நடத்தியது.தலைநகர் பாட்னாவில் உள்ள கும்ஹார் என்ற தேர்வு மையத்தில் 400-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத வந்தனர். அப்போது சமூக வலைதளங்களில் வினாத்தாள் கசிவானதாக செய்தி பரவியது. இதனால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் சிலர் தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்து போராட்டம் நடத்தினர்.அங்கு ஆய்வுக்கு வந்த மாவட்டகலெக்டர் சந்திரசேகர சிங்கை முற்றுகையிட்டு கோஷம் போடவே ஆத்திரமடைந்த மாவட்ட ஆட்சியர் கோஷம் போட்ட தேர்வரை இடது கையால் ஓங்கி அறைந்தார். இதன் வீடியோ, மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இது குறித்து பி.பி.எஸ்.சி., தலைவர் பார்மர் ரவி மனுபாய் , வினாத்தாள் கசிவானதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. மாநிலம் முழுதும் 900 மையங்களில் தேர்வு அமைதியாக நடைபெற்றது. வதந்தியை பரப்பியவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 14, 2024 09:09

தானே தாக்கியது தவறு ......... காவல்துறை எதற்காக இருக்கிறது ????


Raj
டிச 14, 2024 07:06

இப்போது மாவட்ட ஆட்சியாளர்களும் ரௌடிகளாக மாறிவிட்டார்களோ. ஐ ஏ எஸ் சில் இதுவும் ஒரு ட்ரைனிங்கோ. இருக்கலாம் இதுவும் ஒரு புதிய பாடத்திட்டம் போல.....


nagendhiran
டிச 14, 2024 06:40

ஆதாரம் இல்லாமல் புகார் தருபவர்களை அடிப்பதை விட எட்டியே உதைக்கலாம் தவறில்லை?


J.V. Iyer
டிச 14, 2024 03:58

IAS ட்ரைனிங் சரியாக செய்யவில்லையே? யாரை குறை சொல்வது? நாடு எங்கே போகிறது?


Perumal Pillai
டிச 14, 2024 00:17

ரவுடி காலெக்ஷன் ஏஜென்ட் போலும்.


SANKAR
டிச 13, 2024 22:11

ithu dravisham illai.arya vishamga


வைகுண்டேஸ்வரன், chennai
டிச 13, 2024 23:37

ஆரியன் இன்னும் 1000 வருசம் ஆனாலும் கதற விடுவான். பாவம் dravidiyans...


Raj S
டிச 14, 2024 01:52

சொரியான் கும்பலுக்கு, எல்லாத்துக்கும் எப்படி பிராமினிசமோ, அது மாதிரி எங்க திருட்டு தனம், ரவுடித்தனம் நடந்தாலும் அதுக்கு பேர் த்ராவிஷம்தாங்க


வாய்மையே வெல்லும்
டிச 13, 2024 21:37

வாயில நல்லவார்த்தையே வரவில்லை. ஜேப்படிகளை தேர்ந்துஎடுத்து அரியணையில் ஏற்றினால் வாய்க்குவந்த விஷயங்களை ஓஷி என மக்களை ஏளனமாக பேசுவது , கையாலடிப்பது என்ன அரசியலோ .இங்கும் தான் முதல்வர் பாமரனை பேருந்தில் கைநீட்டினார். அவருக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது ? ரவுடிமாதிரி ஒரு தலைவர் நடந்துகொண்டால் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல


புதிய வீடியோ