உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தி.மு.க., பைல்ஸ் -3: அண்ணாமலை வெளியிட்ட 4வது ஆடியோ

தி.மு.க., பைல்ஸ் -3: அண்ணாமலை வெளியிட்ட 4வது ஆடியோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., எம்.பி., ஆ.ராசா - முன்னாள் டி.ஜி.பி. ஜாபர் சேட் ஆகியோரின் தொலைப்பேசி உரையாடல் இடம்பெற்றுள்ள 4வது வீடியோவை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 2023 ஏப்., 14ல், தி.மு.க., பைல்ஸ் பாகம் ஒன்று வெளியிட்டார். அதில் தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d9nwol60&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதை தொடர்ந்து, ஜூலை மாதம் தி.மு.க., பைல்ஸ் பாகம் இரண்டு வெளியிட்டார். அதில், அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன.கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு மற்றும் முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் ஆகியோரின் தொலைபேசி உரையாடலை வெளியிட்டு இருந்தார். பிறகு கடந்த 17ம் தேதி, 2வது ஆடியோ எனக்கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் ஜாபர் சேட் பேசிய ஆடியோவையும் வெளியிட்டு இருந்தார். ஜன.,27 ல் ஆ.ராசா மற்றும் ஜாபர்சேட் பேசும் 3வது வீடியோவையும் வெளியிட்டார்.இந்நிலையில் அண்ணாமலை இன்று ( பிப்.,17) 4வது ஆடியோவை வெளியிட்டு உள்ளார். அதில், தி.மு.க., எம்.பி., ஆ.ராசா மற்றும் முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் உரையாடும் உரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த ஆடியோவுடன் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், ரெய்டு பற்றிய தகவல் முன்கூட்டியே பகிரப்பட்டதால் அனைத்து முக்கிய ஆதாரங்களும் அழிக்கப்படலாம். மாற்றப்படலாம். 2ஜி ஊழலில் தி.மு.க., முன்னாள் எம்.பி., கே.சி. பழனிசாமியின் பெயரை முழுவதும் மூடி மறைப்பதில் காங்கிரசின் தலையீடு அம்பலம் ஆகி உள்ளது. இது போல் மேலும் ஆடியோ வெளி வரும். இவ்வாறு அந்த வீடியோவில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Mayuram Swaminathan
பிப் 23, 2024 15:04

உச்ச நீதி மன்றம் இதே கேள்வியை தில்லி முதல்வர் கேஜ்ரிவாலிடம் கேட்கவேண்டும். சம்மன்களுக்கு பதில் அளிக்காமல் ஏன் இருக்கவேண்டும்? கலக்கமா?


Arachi
பிப் 18, 2024 11:12

இவர் விதவிதமாக வேடிக்கை காட்டுவதில் வல்லவர். 2015 சென்னை வெள்ளத்தில் கரண்டைக் கால் அளவு வெள்ளம் ஓடும்போது போட்டில் சென்று போடோஷுட் எடுத்து படம் காட்டியவர். தான் படித்த படிப்பிற்கேற்ற வேலையைப் பார்க்காமல் வேண்டாத வேலை பார்த்தால் அது wastage in education.


ArGu
பிப் 22, 2024 12:33

பிடிச்ச படிப்புக்கு ஏத்த வேலை தான் செய்யணும்னா


வெகுளி
பிப் 18, 2024 02:56

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு மாடலடா... இது கொள்ளையடிப்பதில் விஞ்ஞானம் செய்த கழக கும்பலடா.... தமிழகம் திருந்த தாமரை மருந்தடா.. தம்பி தெரிந்து வாக்களியடா.....


Varun
பிப் 18, 2024 00:18

Pm kissan not come my land first talk about this problem


Ramesh Sargam
பிப் 17, 2024 23:48

இப்ப எல்லாம் மக்கள் புது திரைப்படங்களுக்கு அவ்வளவு எதிர்ப்பார்ப்பு கொடுப்பதில்லை. ஆனால், அண்ணாமலை DMK Files அடுத்த பாகம் எப்பொழுது வெளிவரும் என்று மிக மிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


K.n. Dhasarathan
பிப் 17, 2024 22:01

இன்றைக்கு எதைப்பற்றி வம்பு பேசி வழக்கு இழுக்கலாம் என்று நாரதர் போல, அண்ணாமலைக்கு இன்று ஒரு செய்தி கிடைத்து விட்டது, முதலில் உங்களுக்கு பின்னால் நிற்கும் எம் பி க்களை பாருங்கள் ஐயா பாதிக்கு மேல் கிரிமினல் வழக்குள்ள எம் பி கல், அவர்களை வைத்த்துக்கொண்டு நீங்கள் ஊழல் பற்றி பேசுகிறீர்கள் கஷ்ட காலம்


Bala
பிப் 18, 2024 02:16

நாரதர் கலகம் என்றுமே நன்மையில்தான் முடியும். 2024 மக்களவை தேர்தலில் இந்த நன்மை எதிரொலிக்கும். 2026 இல் இந்த நன்மை முழுமை அடையும். உங்களுக்கும் கொத்தடிமையிலிருந்து விடுதலை கிடைக்கும். ஓசி பிரியாணி, தமிழக மக்களின் குடியை கெடுக்கும் டாஸ்மாக், இலவசத்திற்காக அரசிடம் பிச்சையெடுக்கும் நிலைமை போன்றவற்றிலிருந்தெல்லாம் விடுதலை கிடைக்கும் தருணம் அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வராகும் தருணம்


ديفيد رافائيل
பிப் 17, 2024 21:33

IPC வேலையை வேண்டாம்னு விட்டதே DMK வை அழிக்க தான் போல


Karthikeyan K Y
பிப் 17, 2024 21:17

அண்ணாமலை அவர்களே - நீங்கள் கொடுக்கும் தகவல் சட்டப்படி உண்மையாய் இருப்பின் பி ஜே பி சார்பில் தமிழக மக்கள் சார்பில் வழக்கு பதிவு பண்ணலாமே அன்பழகன் பதிவு பண்ண வழக்கிலேதான் ஜெயலலிதா அவர்கள் சட்ட சிக்கல்கள் அனுபவித்தார்கள் நீங்களும் திமுக அமைச்சர்கள் எல்லோர் மீதும் செய்யலாமே அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் விளம்பரமோ அறிக்கையோ செய்வதை விட்டு அது செய்ய பாருங்கள்


RAMAKRISHNAN NATESAN
பிப் 17, 2024 22:28

அதைச் செய்ய அண்ணாமலைக்கு கட்டளை இடப்படவில்லை ...... பேரம் படியவைக்கவேண்டும் ......... அது மட்டுமே .......


ManiK
பிப் 17, 2024 20:51

Annamalai sir, please dont release in instalments. All these are National shame and very important to punish the criminals in both நீதிமன்றம் and மக்கள்மன்றம். Please submit to CBI & Supreme Court.


Madhu
பிப் 17, 2024 20:43

விரைவிலேயே தாடியுள்ள ஆடுதான் ஆட்சியைக் கவிழ்க்கப் போகிறது என நினைக்கத் தோன்றுகிறது...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை