உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாதி, மத அரசியலை ஒழிப்பதே பா.ஜ., நோக்கம்: அண்ணாமலை பேச்சு

ஜாதி, மத அரசியலை ஒழிப்பதே பா.ஜ., நோக்கம்: அண்ணாமலை பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை: ஜாதி, மத அரசியலை ஒழிப்பதே பா.ஜ.,வின் நோக்கம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டசபை தொகுதியில், ‛‛என் மண், என் மக்கள்'' பாதயாத்திரையை அண்ணாமலை மேற்கொண்டார். அப்போது அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் ஆளும் கட்சியை சார்ந்தவர்களுக்கான அரசியலாக உள்ளது. சாதாரண மக்களுக்கான அரசியலாக இல்லை. படிப்புக்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம் இல்லை. தண்ணீர் பிரச்னையால் விவசாயம் செய்ய முடியவில்லை.இந்த யாத்திரையின் மூலம் புதிய அரசியலை கொண்டு வர வேண்டும். பா.ஜ., ஆட்சியில் ஜாதி, மத, அடாவடி, குடும்ப அரசியலுக்கு இடம் கிடையாது. தமிழகத்தின் முக்கியமான பிரச்னை, தரமான கல்வி கிடைக்கவில்லை. தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரமில்லாமல் இருக்கிறது. எந்த பணமும் வாங்காமல், உலக தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார். ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களும், இந்த சமுதாயத்தில் முக்கியமான மனிதர்களாக வர வேண்டும். தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 31 மாதங்கள் ஆகிறது. 70ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து வைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

மாப்பிள்ளை எங்களதுங்க

இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஸ்டாலின் ரூ.6 ஆயிரம் கொடுத்தார் என கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த பணம் யாருடையது. ரூ.6 ஆயிரம் மத்திய அரசு பணம். ஆனால் பணத்தை கொடுத்த கவர் மட்டும் தி.மு.க., அரசு உடையது. ஒரு கவர் விலை ரூ.2. தி.மு.க., அரசை ஒரே வார்த்தையில் கூற வேண்டுமென்றால், மாப்பிள்ளை எங்களதுங்க, சட்டை உங்களதுங்க என கூற முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

g.s,rajan
ஜன 31, 2024 20:47

கோட்டா இருந்தால்தான் நம் நாட்டில் அரசியல்வாதிகளின் பிழைப்பு ஓடும் ....


g.s,rajan
ஜன 31, 2024 16:46

அதுதான் நிர்மலா சீதாராமான் மக்கள் எல்லாருக்குமே நல்லா அல்வாவைக் கிண்டிக் கொடுத்தாங்களே,ஜி.எஸ்.டி யை பற்றி விமர்சித்த அரசு அதிகாரிக்கும் ஓய்வு பெறும் நேரத்தில் அல்வாவைக் கொடுத்துட்டார்...


Sampath Kumar
ஜன 31, 2024 11:10

அப்புறம் எங்கேயோ கேட்டமாதிரி இருக்கு


தாமரை மலர்கிறது
ஜன 31, 2024 02:06

சாதி மதத்தை ஒழிக்க முதலில் கோட்டாவை ஒழிக்க வேண்டும்.


lakshmimainthan
ஜன 30, 2024 19:39

திரும்ப திரும்ப சொல்வதால் பொய் மெய்யாகிவிடாது. தமிழக மக்கள் சிந்திக்க தெரிந்தவர்கள்.


திகழ்ஓவியன்
ஜன 30, 2024 19:13

ஓசி சோறு உங்களுக்கு நோட்டா AWARD வாங்கி கொடுத்தாரே கரு நாகராஜ் அவரை நீங்கள் RK NAGAR இல் நாடார் என்கிற ஜாதி பார்த்து தானே நிறுத்தினீர்கள்


K.Ramakrishnan
ஜன 30, 2024 19:13

எந்த அரசின் பணமாக இருந்தால் என்ன? மத்திய அரசு பணம்னா... மோடி வீட்டில் இருந்து கொண்டு வந்தாரா? மக்களின் வரிப்பணம் தானே... நாங்க கட்டுற ஜிஎஸ்டி வருவாயில்இருந்து வந்தது தானே... நாங்க ஓட்டலில் சாப்பிடுகிற சாப்பாட்டுக்கே வரி போட்டது மோடி அரசு தானே.. எந்த நாட்டிலாவது மக்கள் சாப்பிடுகிற சாப்பாட்டுக்கு வரி போட்டது உண்டா?


N.K
ஜன 30, 2024 22:09

GST க்கு முன்னாடி VAT கட்டிக்கொண்டுதான் இருந்தீர்கள்?


N.K
ஜன 30, 2024 22:09

சேவை வரி பெரும்பாலான நாடுகளில் உள்ளது


திகழ்ஓவியன்
ஜன 30, 2024 19:12

அண்ணாமலை ::மாதம் 10 LAKSM நண்பர்கள் அவரின் குடும்ப செலவு , ஆபீஸ் ரெண்ட் BANGLOW RENT CAR DESEL டிரைவர் இப்படி செலவுக்கு DONATION / GIFT கொடுக்கிறார்கள் என்கிறார் , ரத்த சம்பந்தம் ...இல்லாதவர்களிடம் பெரும் GIFT TAXABLE அப்போ வருடத்திற்கு 1.20 லக்ஸம் .. வாங்கும் ஓசி சோறு இதற்கு GIFT TAX செலுத்தினாரா , முதலில் அவர் ஊழல் இல்லாமல் முன் உதாரணமா இருக்க சொல்லுங்கள் .


முருகன்
ஜன 30, 2024 19:03

ஆனால் ராமரை மட்டும் உயர்த்தி பிடிப்போம்


venugopal s
ஜன 30, 2024 18:48

சாத்தான் வேதம் ஓதுகிறது?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி