உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இலவசங்கள் கொடுப்பதற்கு மட்டும் அரசுகளுக்கு பணம் இருக்கிறதா?

இலவசங்கள் கொடுப்பதற்கு மட்டும் அரசுகளுக்கு பணம் இருக்கிறதா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'எந்த வேலையும் செய்யாதவர்களுக்கு இலவசங்களை கொடுக்க அரசுகளுக்கு பணம் இருக்கிறது; நீதிபதிகளுக்கு ஊதியம் மற்றும் பென்ஷன் வழங்கும்போது மட்டும் பொருளாதார நெருக்கடி இருப்பதாக கூறுகின்றனர்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகளுக்கான ஊதியம், பென்ஷன் போன்றவை தொடர்பாக அகில இந்திய நீதிபதிகள் சங்கம் சார்பில், 2015ல் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் நடந்தது.அப்போது, ''நீதித்துறையை சேர்ந்தவர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை முடிவு செய்யும்போது நிதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்,'' என, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி தெரிவித்தபோது நீதிபதிகள் குறுக்கிட்டனர்.'எந்த வேலையும் செய்யாமல் இருக்கக்கூடிய நபர்களுக்கு இலவசத்தை வழங்குவதற்கு அரசுகளிடம் பணம் இருக்கிறது. குறிப்பாக, மஹராஷ்டிரா தேர்தலின் போது பெண்களுக்கு நேரடியாக நிதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. டில்லி சட்டசபை தேர்தலுக்காக, 2,500 ரூபாய் வரை மாதம் தோறும் வழங்குவோம் என்ற வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் கொடுத்துள்ளன. உங்களுக்கு இதற்கெல்லாம் பணம் இருக்கிறது; ஆனால் நீதிபதிகளுக்கானஊதியம், பென்ஷன் போன்றவை குறித்து பேசினால் நிதி நெருக்கடி குறித்து கூறுகிறீர்கள்' என, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, ''இலவசங்கள் வழங்கும் நடைமுறைகளை அறிவிக்கும்போது நிதி சுமைகளையும் அரசுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார்.இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், நீதித்துறை மேலும் சிறப்புடன் செயல்படுவதற்கு நீதிபதிகளுக்கு நல்ல ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்பதை, தன் தரப்பு வாதமாக வைத்தார். விசாரணை இன்றும் தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

Praveen Kumar
ஜன 08, 2025 17:44

கல்வி மற்றும் மருத்துவம் தவிர வேறு எதற்கும் இலவசம் கூடாது என்று சட்டம் அறிவிக்க வேண்டும்


balraj p
ஜன 08, 2025 15:54

நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை எதற்கு? நீதிபதிகள் வேண்டாம் என்று சொல்வார்களா


V வைகுண்டேஸ்வரன்
ஜன 08, 2025 15:31

பணக்காரர்கள் இலவசங்களை எதிர்த்துக் கொண்டு தான் இருப்பார்கள். பெரும் பணக்காரர்கள் வாங்கிய கடன்களை திரும்ப அரசிடம் செலுத்தச் சொல்லுங்கள். அரசு கருவூலங்கள் நிரம்பி வழியும். பெரும் பணக்காரர்களுக்கு அரசு கடன்களை வாரி வழங்கி, பிறகு தள்ளுபடி செய்கிறதே அவை தான் இலவசங்கள்.


veera
ஜன 08, 2025 16:31

சூப்பர்.... இதை திராவிட தலைகளில் இருந்து தொடங்கலாம்


PARTHASARATHI J S
ஜன 08, 2025 15:29

விலைவாசியை எல்லாவிதத்திலும் கட்டுப்படுத்துங்கள். பங்குசந்தை வாரம் ஒருநாள் மட்டுமே இயங்கும். வேலை வாய்ப்பினை பெருக்குங்கள். திறன் மேம்பாடு பயிற்சிக்களங்களை மாவட்டம் தோறும் நிருவுங்கள். இதையெல்லாம் செய்தால் இடஒதுக்கீடு தேவையில்லை, இலவசமும் தேவையில்லை. எதுஎதற்கோ நிபுணர் குழு. இந்த இடஒதுக்கீடு, இலவசங்களை ஒழிக்கவும் நிபுணர் குழு ( காலவரைக்கு உட்பட்ட )?அமைத்தால் மிக நல்லது.


ameen
ஜன 08, 2025 14:23

எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி களுக்கான சம்பளத்தை ஒரே தீர்மானத்தில் ஏற்றி கொள்கிறார்கள், அரசு ஊழியர்களுக்கு அப்பப்பே அகவிலைப்படி சம்பளம் ஏறுது, இவங்க தீர்ப்பின் மூலம் பெற்றுகொள்ள வாய்ப்பிருக்குது....ஆனா மக்களாகிய எங்களை யாராவது கண்டு கொள்கிறார்களா? வரி மேல் வரி போட்டு எங்களை வரி குதிரை மாதிரி ஆக்கிவிட்டிர்களே....


Ramesh Sargam
ஜன 08, 2025 12:37

தமிழகத்தில், தெலுங்கானாவில் பெண்களின் வாக்குகளை பெற இலவச பஸ் பாஸ். ஆனால் அதே பெண்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு இலவச படிப்பு இல்லை, இலவச மருத்துவம் இல்லை. மேலும் தாரணமான கல்விக்காக அவர்கள் நாடுவது ஆட்சியில் உள்ளவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகள். அங்கே படிப்பு இலவசமா? இல்லை, அரசு பள்ளிகளைவிட கட்டணம் பல மடங்கு. அப்புறம்....


Dhurvesh
ஜன 08, 2025 14:10

கார்பொரேட் களுக்கு 21 லட்சம் கோடி இதற்க்கு பணம் இருக்க , இந்த தொகை இலவசத்தில் 500 மடங்கு ஆயிற்றே இதை கோர்ட் கேட்காதா


Madras Madra
ஜன 08, 2025 11:45

யுவர் ஹானர் உங்களுக்கு பிரச்சினை என்றால் மட்டும் இதெல்லாம் பேசுவீங்க ரொம்ப காலமா இது சமூக பிரச்சினை அப்பெல்லாம் நீங்க ரொம்ப பிசியா ?


Rajasekar Jayaraman
ஜன 08, 2025 11:26

குற்றவாளி என்று தீர்பு சொல்ல பட்டவர் தண்டனையை நிறுத்தி வைத்து மீண்டும் அமைச்சராக வழி செய்வது எந்த விதத்தில் மக்களுக்கு நீதிபோதனை நடத்துகிறார் அவருக்கு எங்களின் வரிப்பணம் ஓய்வூதியமாக கொடுக்க வேண்டுமா.


அப்பாவி
ஜன 08, 2025 10:47

எல்காம் நம்ன சட்ட மேதைகள் வகுத்துள்ள சட்டங்களில் உள்ள ஓட்டைகள்தான் காரணம் யுவர் ஆனர். நீங்க ஃப்ராடு அரசியல்வாதிகளை கேள்வி கேக்க முடியாது. தத்தி மக்களுக்கு அறிவு கிடையாது. அதிகாரிகள் ஆட்சியாளர்களின் அடிமைகள். நாடே ஏதோ தர்மத்திலே ஓடுது.


அப்பாவி
ஜன 08, 2025 10:44

ஆளும்கட்சிக்கு சாதகமா தீர்ப்பு குடுத்து எம்.பி ஆயிடலாம்.


சமீபத்திய செய்தி