உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலில் இழுக்காதீர்கள்: ராணுவ தளபதி கருத்து

அரசியலில் இழுக்காதீர்கள்: ராணுவ தளபதி கருத்து

புதுடில்லி: ''ராணுவத்தை அரசியலில் இழுக்க வேண்டாம்,'' என, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்தார். பார்லி.,யில் இம்மாத துவக்கத்தில் பேசிய காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'நம் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. இதை பிரதமர் மோடி மறுக்கிறார். ஆனால், நம் நிலப்பரப்பில் சீனப் படைகள் இருப்பதாக ராணுவமே கூறுகிறது' என்றார்.இதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், ராகுலுக்கு விரிவாக பதிலளித்தார். இந்நிலையில் நேற்று, தனியார் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதியிடம், ராகுலின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ''ராகுலின் குற்றச்சாட்டுக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசியல் ரீதியில் பதிலளித்து விட்டார். இது தொடர்பாக ராணுவ அமைச்சகமும் விளக்கம் அளித்து விட்டது. என்னை பொறுத்தவரை, ராணுவத்தை அரசியலில் இழக்கக் கூடாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Anand
பிப் 20, 2025 12:22

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசும் எந்த ஒரு கைக்கூலிகளையும் சீக்ரெட் ஆபரேஷன் மூலம் அழித்தொழிக்க முடியாதா?


பாலிடிக்ஸ்பாபு
பிப் 20, 2025 10:44

சீனாவுக்கு பதிலடி. பாகிஸ்தானுக்கு பதிலடி மாதிரி பேச்சுக்களை ராணுவ தளபதிகள் தவிர்க்கணும். அதெல்லாம் அரசியல்வாதிகள் பேசும் பேச்சு. அதே போல அமைச்சர்களுக்கு ஜல்லியடிபதையும் தவிர்க்கணும். பதவி நீட்டிப்பு ஏற்றுக் கொள்ளவே கூடாது. கரெக்டா ரிடையராயி வீட்டுக்குப் போகணும்.


veeramani
பிப் 20, 2025 09:38

வெட்டப்பட்ட கை சின்னம் கட்சி .1964 ல் நேருவின் கொள்கையை உதாசீனப்படுத்தி சீனா இந்திய சில பகுதிகளை ஆக்ரிமாத்துது . நேரு என்ன செய்தார்? ஆனால் கல்பன் பகுதியை கபாலிகா ரம் செய்ய முனைந்தபோது மோடி அரசு சரியான பதிலடி கொடுத்தது . ஆயுதமில்லாமல் சுமார் 42 சீனர்கள் செத்தனர். அந்த கட்டம்தான் இன்னும் சீனா முக்கியக்கி இந்திய எல்லையில் நுழைய முயல்கிறது. ஆனால் இன்று இந்திய சர்க்கார் எவனாயினும் காலை வைத்தால் சுடுங்கள். பின்னர் பஞ்சாயத்து என தெனாவட்டாக கூறிவிட்டது. எனவே இந்தியர்கள் அனைவரும் மோடி சர்க்காருக்கு சப்போர்ட் செய்வோம்


Kalyanaraman
பிப் 20, 2025 08:37

ஜார்ஜ் ஸோரசிடம் காசு வாங்கும் சீன கைக்கூலிகள் நாட்டுக்கு எதிராக என்ன வேணுமானாலும் பேசுவார்கள். ஏனெனில் நம் நாட்டில் ஆண்மையற்ற, முதுகெலும்பற்ற சட்டங்கள் இருப்பதே.


GMM
பிப் 20, 2025 08:18

காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் செய்ய செய்ய ஏராள வழி உண்டு. இந்திய ராணுவத்தை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம். 18 வயதிற்கு மேல் உள்ள ஆரோக்கிய குடிமகனுக்கு தகுதி அடிப்படையில் தேசிய மாணவர் படை, அக்னீவீர், ராணுவ பயிற்சி கட்டாயம் ஆக்க வேண்டும். இவர்கள் தான், ராணுவம், மத்திய ,மாநில போலீஸ், தனியார் செக்யூரிட்டி யில் சேர தகுதியானவர் என்ற சட்டம் தேவை. சுற்றிலும், உள்நாட்டிலும் எதிரிகள் அதிகரிப்பு.


orange தமிழன்
பிப் 20, 2025 07:43

தேச துரோகி பப்புவை நாடு கடத்த வேண்டும் அல்லது கைது செய்ய வேண்டும்....... மோடிக்கு எதிராக பேசுகிறேன் என்று நினைத்து கொண்டு நாட்டையும் நம் இராணுவத்தையும் விமர்சிபவர், நமக்கு தேச துரோகி தான்....... ஜெய் ஹிந்த்..


shan
பிப் 20, 2025 06:27

அக்னி வீர் திட்டம் எவ்வளவு அவசியம் என்பது ராணுவத்துக்கு தான் தெரியும் ராகுல் வெளிநாட்டுக்கு காட்டிலொடுக்கும் என்னத்திலே ஏ பேசுவார்


Kasimani Baskaran
பிப் 20, 2025 06:11

நிறைய அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் இந்திய இராணுவத்தின் பங்களிப்பை சிறுமைப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க ஆண்டவனை பிரார்திக்கத்தான் முடியும்.


Kalyanam Siv
பிப் 20, 2025 06:08

ராணுவத்தில் அரசியல் செய்வதே பிஜேபி தான் . ஒரே குளறுபடி . அக்னிவீர் ? MSP , ஊனமுற்ற பென்ஷன் முதலியவற்றில் அரசியல்


Jagannathan Narayanan
பிப் 20, 2025 07:00

200 given


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 20, 2025 11:05

ராணுவத்தில் எந்த ரேங்கிலிருந்து ரிடெய்ரட் ஆனீர்கள் திரு.கல்யாணம் அவர்களே....???


Prabu.KTK
பிப் 20, 2025 12:06

திரு அறிவு கெட்ட அறிவாளியே போய் வேறே வேலைய பார்


சமீபத்திய செய்தி