உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாடு செல்லும் டாக்டர்கள் தாய்நாட்டை குறை சொல்லக்கூடாது: நட்டா

வெளிநாடு செல்லும் டாக்டர்கள் தாய்நாட்டை குறை சொல்லக்கூடாது: நட்டா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலை யின் 21வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா நேற்று பேசியதாவது: மருத்துவக் கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, இந்த சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பை, இளம் டாக்டர்களான நீங்கள் வழங்க வேண்டும். ஒரு டாக்டரை உருவாக்க, சராசரியாக 35 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவாகிறது. ஒரு முறை வெளிநாடு சென்ற இளம் டாக்டரிடம், 'ஏன் அங்கு செல்கிறீர்கள்' என, கேட்டேன். அவர், 'இந்தியாவில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை' என்றார். இளம் டாக்டர்கள் வெளிநாடு செல்வதற்கு சுதந்திரம் உண்டு. ஆனால், இந்தியாவில் மருத்துவ வசதிகள் இல்லை என, இனி அவர்கள் குறை சொல்ல வேண்டாம்; அவ்வாறு கூறவும் முடியாது. நம் நாட்டில், ஒரேயொரு எய்ம்ஸ் மருத்துவமனை இருந்த நிலை மாறி, அதன் எண்ணிக்கை 23 ஆக தற்போது உயர்ந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 62 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது. இது, உலகின் மிகப்பெரிய திட்டம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Rathna
டிச 21, 2025 11:22

மருத்துவ செலவில் இந்தியா மிக குறைந்த நாடுகளில் ஒன்று. அமெரிக்கா போன்ற நாடுகளில் மருத்துவ செலவால் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் அதிகம். இன்சூரன்ஸ் இல்லாவிட்டால் குடும்பமே காலி. அதிக மருத்துவ கொள்ளை அங்கே டாக்டர்களின் அதிக வருமானமாக வருகிறது.


Priyan Vadanad
டிச 21, 2025 08:57

எல்லா அரசியல்வாதிகளும் வெளிநாட்டுக்கு சென்று அவர்களது பணியை செய்யலாம் என்றிருந்தால் எப்படியிருக்கும்? ஒரு கற்பனைதான்.


D Natarajan
டிச 21, 2025 08:22

அனைத்து டாக்டர்களும் இந்தியாவில் கட்டாயமாக 5 ஆண்டுகள் பணி புரிய வேண்டும். இது கட்டாயமாக்க பட வேண்டும்


kannan
டிச 21, 2025 08:05

அப்ப IIT யில் மக்கள் பணத்தில் படித்தவர்கள் போனால் பரவாயில்லையா? இதில் படித்த எவரும் ISRO வில் சேருவதில்லை, இட ஒதுக்கீட்டில் படித்தவர்களே இந்தியாவை தலைநிமிர வைக்கிறார்கள். iIT யில் மக்கள் பணம் செலவிடப்படுவதும் தவறுதானே, அல்லது முழு பணத்தையும் கொடுத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் போகச்சொல்லலாம், அல்லது 10 வருடத்திற்க்கேனும் பாஸ்போட்டை நிறுத்திவைக்கலாம்.


Ramachandran Chandrasekaran
டிச 21, 2025 09:48

இந்தியாவில் 23 ஈட்ட தான் ulladhu


Ramachandran Chandrasekaran
டிச 21, 2025 07:50

நீங்கள் முதலில் வருமானவரி செலுத்துபவர்களை எவ்வாறு நடத்துகிறீர்கள், உண்மையில் இலவசங்களுக்கு பணம் அவர்களிடம் இருந்து தானே வருகிறது


Barakat Ali
டிச 21, 2025 07:25

டாக்டர்கள் குறை சொல்வது இருக்கட்டும்... ராகுல் பல வருடங்களாகவே வெளிநாடுகளில் இந்தியாவைத் தொடர்ந்து இழிவு படுத்தி வருகிறார்.. மத்திய அரசால் ஒன்றுமே செய்ய முடிவதில்லை .....


Priyan Vadanad
டிச 21, 2025 08:59

அழுக்கு படிந்து இருக்கிறது என்பதால் அதனை நீக்கும் நல்ல சோப்பு கிடைக்குமா என்று போயிருப்பார்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 21, 2025 10:15

அதனை நீக்கும் நல்ல சோப்பு கிடைக்குமா என்று போயிருப்பார்... தனது வாதம் அல்லது குற்றச்சாட்டு நியாயமே என்று ராகுலால் எதையும் நிரூபிக்க முடிவதில்லையே வெளிநாட்டவரும் சிரிக்கும் விதத்தில் நடந்து கொள்கிறாரே


Rathna
டிச 21, 2025 11:18

அழுக்கே அழுக்கை எப்படி நீக்கும்? அதற்கு சோப்பு இன்னும் உலகத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை.


Kasimani Baskaran
டிச 21, 2025 06:46

எல்லா ஊரிலும் குறைகள் இருக்கத்தான் செய்கிறது. சிறப்பான சுகாதார உட்கட்டமைப்புக்களை அரசு உருவாக்குவது மிக அவசியம்.


Priyan Vadanad
டிச 21, 2025 08:56

மிகவும் வரவேற்கப்பட வேண்டிய கருத்து மட்டுமல்ல. இந்த கருத்தை செயல்படுத்த வேண்டியதும் அவசியம்.


Indian
டிச 21, 2025 05:21

"குறை சொல்ல கூடாது" என்பதை விட , குறை சொல்லா வண்ணம் நடந்து காட்டு ..


Srini
டிச 21, 2025 06:50

Indian, you should be an Indian first, don't blindly put hate comments here if you don't like Modi and his government show your views on the ballot , don't be like pappu


N Sasikumar Yadhav
டிச 21, 2025 06:58

உங்களை மாதிரியான ஆட்கள் குறை சொல்வதை மட்டுமே கொள்கையாக கொண்டவர்கள்


Barakat Ali
டிச 21, 2025 07:23

செய்தியைப் படிக்காமலேயே குடும்பக்கட்சியின் கொத்தடிமைகள் கருத்திடுவது வழக்கம் ......


V Venkatachalam, Chennai-87
டிச 21, 2025 15:42

சொல்ல வேண்டியதை இங்க சொல்றவன் என்ன மாதிரியான அறிவுக் கொழுந்து?


சமீபத்திய செய்தி