உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "டில்லி உஷ்ஷ்ஷ்..." பா.ஜ., -- ஆர்.எஸ்.எஸ்., பிரச்னை தொடர்கிறது?

"டில்லி உஷ்ஷ்ஷ்..." பா.ஜ., -- ஆர்.எஸ்.எஸ்., பிரச்னை தொடர்கிறது?

'பா .ஜ.,விற்கும், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கும் பிரச்னை' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பல மாதங்களாக பேசப்பட்டு வந்தது. '75 வயதில் அரசியலிலிருந்து தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியது, பிரதமர் மோடிக்கும் பொருந்தும்' என பேசப்பட்டது. ஆனால், இதை மறுத்த மோகன் பகவத், 'எங்கள் இயக்கத்திற்கும், பா.ஜ.,விற்கும் எந்தவித பிரச்னையும் இல்லை; 75 வயது குறித்து நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டனர்' என கூறினார்.'ஒரு வழியாக பிரச்னை ஓய்ந்துவிட்டது' என நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி. ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு நெருக்கமான முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.,வின் தேசிய தலைவராக பணியாற்றிய முரளி மனோகர் ஜோஷி பிரச்னையை கிளப்பியுள்ளார்.சமீபத்தில், ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகள் குறித்து, நாக்பூரில் ஒரு ரகசிய கூட்டம் நடந்தது. இதில், 80க்கும் மேற்பட்ட சீனியர் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் பங்கேற்றனர். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் குறித்து ஜோஷி பேசினார். 'ஒரு நாட்டின் முன்னேற்றத்தை, மக்களின் வருமானத்தை வைத்து மட்டும் எடை போட முடியாது; தற்போதைய பொருளாதார வளர்ச்சியால், மக்களின் நலன் முழுமை அடையவில்லை' என, அமர்த்தியா சென் கொள்கையை சுட்டிக் காட்டியுள்ளார் ஜோஷி.சென்னிற்கும், பா.ஜ.,விற்கும் எப்போதுமே ஆகாது. மோடிக்கு எதிராக பேசி வருபவர் சென். இந்நிலையில், ஜோஷி பேசியது, பா.ஜ.,வில் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.'எங்கள் அமைப்பிற்கும், பா.ஜ.,விற்கும் எந்த சண்டையும் இல்லை' என, பகவத் சொல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன், இந்த ரகசிய கூட்டம் நடந்தது. ஆனால், இந்த செய்தி இப்போது வெளியாகியுள்ளது. வேண்டுமென்றே ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் இதை கசிய விட்டனரா அல்லது ஜோஷியே இதை வெளியிட்டாரா என தெரியவில்லை.ஆனால், 'பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., பிரச்னை தொடர வேண்டும்' என, உள்ளே இருப்பவர்களே இதை செய்துள்ளனர் என்பது மட்டும் நிச்சயம். 'பிரச்னை முடியவில்லை; தொடர்கிறது' என்பது தான் டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் சூடான செய்தி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

V.Mohan
செப் 07, 2025 14:47

ஆர்.எஸ.எஸ். இயக்கம் பாரத தேசத்தின் மேன்மைக்காக பாடுபடும் இயக்க்மாகத் தான் இன்னும் உள்ளது. அரசியலுக்கு நேரடியாக வரும் எண்ணம் அதற்கு என்றுமே இல்லை. ஹிந்துத்வ எண்ணம் கொண்ட பாஜக வை வழிநடத்துமே ஒழிய பாஜகவை பின்னின்று இயக்காது. அவ்வாறான எண்ணம் உள்ளதாக காங்கிரஸ் முதலிய கட்சிகள் தான் பொய்யாக குறை கூறுகின்றன. பாரத தேசம் சனாதன தர்மத்தின் வழி நடத்தப்பட வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கம். அதை செயல்படுத்தும் நிலையில் பாஜக மட்டுமே உள்ளது. இது எல்லோருக்கும் தெரியும். சும்மா எதிர்கட்சிகள் தான் எதையாவது கிளப்பி விட்டு அதில் குளிர் காய்கின்றன.


Sangi Mangi
செப் 07, 2025 13:24

சபாஷ் சரியான போட்டி, சங்கிகளின் அழிவு காலம் தொடங்கி விட்டது... அதை மக்களுக்கு உரக்க சொல்லும் மலருக்கு ஒரு சபாஷ்...


Artist
செப் 08, 2025 09:06

Rafiq சஙகி ரெண்டுக்கும் அர்த்தம் ஒன்றே ..முகலாயர் ஆட்சியும் ஆங்கிலேயர் ஆட்சியையும் சங்கிகளை ஒழிக்க முடிந்ததா ?


Rathna
செப் 07, 2025 11:20

பிஜேபி தனது கொள்கை பிடிப்புகளில் தளர்ந்து விட்டது என்பது உண்மை. அதற்கு முதல் உதாரணம் பங்களாதேஷி மற்றும் வெளி நாட்டு மக்களை வெளியேற்றுவதில் சுணக்கம் காண்பிக்கிறது. எந்த பங்களாதேஷியும், பாக்கிஸ்தானியும் பிஜேபிக்கு வோட்டு போடுவதில்லை என்பதை பிஜேபி புரிந்து கொள்ள வேண்டும்.


தத்வமசி
செப் 07, 2025 09:19

சரிங்க. மோடிக்கு எழுபத்தி ஐந்து வயதாயிற்று, அவரை மாற்ற வேண்டும். அதானே இவர்களின் துடிப்பு. சரி அவரைப் போல இந்த வயதில் துடிப்போடு, கம்பீரமாக, ஒய்வு என்பதே இல்லாமல், விமானத்தில் இருந்து இறங்கிய அடுத்த நிமிடம் பொது நிகழ்ச்சி, பெற்ற தாயின் ஈமக்கடன்களை முடித்தவுடன் நாட்டின் மற்றொரு மூலையில் வளர்ச்சிபணிகளின் தொடக்க விழா, ஒரு நாள் கூட விடுமுறையோ ஓய்வோ இல்லாமல் வேலை செய்யும் யாரையாவது ஒருவரை இந்த வயதின் காட்டுங்கள். அதுவும் இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்காவது காட்டுங்கள். ஓய்வறியா சூரியனை வீழ்த்த நினைக்கும் மேகங்களுக்கு சூரியனை கொஞ்ச நேரம் மறைக்க இயலுமே தவிர சூரியனாக மாற இயலாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 07, 2025 09:18

பாஜகவும் வாக்குவங்கிக்காக மதச் சிறுபான்மையினரை தாஜா செய்யும் வேலையில் இறங்கிவிட்டது. அதுதான் அடிப்படைக்காரணம் ..... அதை மறைக்கிறார்கள் .....


தாமரை மலர்கிறது
செப் 07, 2025 08:14

பிஜேபியை உருவாக்கிய தாய் ஆர் எஸ் எஸ். பிள்ளைக்கும் தாயுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. ஆர் எஸ் எஸ் ஒரு ராணுவ கட்டமைப்பானது. பிஜேபி உட்பட அனைத்து அமைப்பையும் வழிநடத்தி செல்லும் கடமை ஆர் எஸ் எஸ் உடையது. ஆர் எஸ் எஸ் க்கு வெறும் அரசியல் மட்டுமே இலக்கல்ல. ஒட்டுமொத்த பாரதத்தின் உயர்வை உன்னதத்தை உயர்த்த உருவாக்க பட்ட அமைப்பு.


VENKATASUBRAMANIAN
செப் 07, 2025 08:03

வயதானாலே என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுவார்கள்


Kasimani Baskaran
செப் 07, 2025 07:08

அந்த சென் ஒரு செ சிதம்பரம் போன்ற வீணாய்ப்போன ஆள்... இதற்க்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தால் இந்தியா நாசமாவது நிச்சயம்.


Artist
செப் 07, 2025 06:48

RSS திக மாதிரி பிஜேபி திமுக மாதிரி அவ்வளவு தான்


K V Ramadoss
செப் 07, 2025 06:40

முரளி மனோஹர் ஜோஷி வெகு நாட்களுக்கு முன்பே ஓரம் கட்டப்பட்டவர்.. அவருடைய செயல்கள் பிஜேபி மேலிடத்திற்கு திருப்தியாக இல்லை ..அந்த காய்ப்பில் இப்போது பழி வாங்குகிறார். இவரால் நாட்டுக்கு எந்த நல்லதும் கிடையாது ...


Kadaparai Mani
செப் 07, 2025 10:55

Just like K.A. Sengottian


சமீபத்திய செய்தி