உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்க மத்தியஸ்தத்தை ஏற்கிறதா அரசு? பிரதமர் பதில் அளிக்க காங்கிரஸ் கோரிக்கை

அமெரிக்க மத்தியஸ்தத்தை ஏற்கிறதா அரசு? பிரதமர் பதில் அளிக்க காங்கிரஸ் கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை மத்திய அரசு ஏற்கிறதா. டிரம்ப் விடுத்த வர்த்தக மிரட்டலுக்கு பயந்து போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதா. என்ற கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்' என, காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து வந்த மோதல், மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது.இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவித்தார். அதன் பிறகே, மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.இந்நிலையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு உரையாற்றினார்.அவரது உரைக்கு சில மணி நேரம் முன்னதாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், 'அமெரிக்காவின் மத்தியஸ்த நடவடிக்கையால் அணு ஆயுத போர் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், போரை நிறுத்தாவிட்டால் இந்தியா-பாக்., உடனான வர்த்தகத்துக்கு தடை விதிக்கப்படும் என கூறியதை அடுத்து, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மிக தாமதமான பிரதமரின் உரைக்கு சில மணி நேரங்கள் முன் பேசிய அதிபர் டிரம்பின் வார்த்தைகளால், பிரதமரின் பேச்சு தலைகீழாக மாறியுள்ளது. இதுகுறித்து பிரதமர் மவுனம் காக்கிறார்.காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்த நடவடிக்கையை மத்திய அரசு ஏற்கிறதா. இரு தரப்புக்கும் பொதுவான இடத்தில் பேச்சு நடத்த, மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதா.அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஆட்டோமொபைல், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுக்கான சந்தையை மத்திய அரசு திறந்துவிடுமா. இந்த கேள்விகளுக்கெல்லாம் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்.நம் ஆயுதப்படைகளின் செயல்பாட்டை சல்யூட் அடித்து வரவேற்கிறோம். அவர்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். நாங்கள் எப்போதும் அவர்களுடன் துணை நிற்போம். அதே நேரம், பிரதமர் மோடி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தே தீரவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Arul. K
மே 14, 2025 13:53

பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 14, 2025 12:18

இராணுவ இரகசியம் பகிர்தல் தவறு என்று இராணுவம் கூறுகிறது. பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பதவி பிரமாணம் எடுக்கும் போது இரகசியம் காப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டு உள்ளார்கள்.


Ambedkumar
மே 14, 2025 11:59

காலாவதியான காங்கிரஸ் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கும்


Madras Madra
மே 14, 2025 11:10

பா ஜா க வின் மோடியின் புகழ் மற்றும் செல்வாக்கு எங்கோ போய் விட்டது ஆபரேஷன் செந்தூர் க்கு அப்புறம் அதான் கதறல் அதிகமா இருக்கு இன்னும் போக போக கதறல்கள் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் ENJOY


Madras Madra
மே 14, 2025 11:03

அதான் யார் மத்யஸ்த்தையும் இந்தியா ஏற்காது என்று கூறி விட்டாரே போய் அந்த பேச்சை கேளுங்க


Anand
மே 14, 2025 11:01

அவர் தான் ஏற்கனவே எங்களுக்கு யாரோட அறிவுரையும் மத்தியஸ்த்தையும் தேவையில்லை என ஆணித்தரமாக அடித்து கூறிவிட்டார், இந்த காங்கிரஸ் குள்ளநரிகள் ஏன் ஊளையிடுது? ஒருவேளை பாகிஸ்தானை மண்டியிட வைத்துவிட்டார் என்கிற கவலையோ? முதலில் இவங்களை பெண்டெடுத்து நாட்டை விட்டு துரத்தவேண்டும்..


மொட்டை தாசன்...
மே 14, 2025 10:39

காங்கிரஸ்காரங்களுடைய புத்தியே எதோ ஒரு வகையில் பிஜேபியை மட்டம்தட்ட வேண்டும் அதனால் இந்தியாவிற்கு பாதகம் வந்தாலும் பரவாயில்லை.இதுதான் அவர்கள் நோக்கம். காங்கிரஸ் ஒழியும் வரை நாட்டுக்கு நிம்மதி கிடையாது .


Dharmavaan
மே 14, 2025 09:55

மானம் கெட்ட பச்சோந்திகள், சந்தர்ப்ப வாத, தேசத்துரோகிகள் இந்த நேரத்தில் மோடியை சங்கடப்படுத்த அலையும் ஜந்துக்கள் நாட்டை விட்டே துரத்த வேண்டும் ,மோடி டிரம்ப் சொன்னதை ஏற்கிறேன் என்று சொன்னாரா பின் ஏன் இந்த கோரிக்கை


Sridharan Dhandayuthapani
மே 14, 2025 09:53

"ப்ளீஸ் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, போர் இன்னும் முடியல. அதுக்குள்ள காங் அக்கப்போர் வேற"


ஆரூர் ரங்
மே 14, 2025 09:33

சித்ரா பவுர்ணமி அன்று முழுநிலவு வந்ததற்கு தான்தான் காரணம் என்றுகூட டிரம்ப் கூறுவார். அதனையும் நம்பி காங்கிரசும் கேள்வி கேட்கும். நிலாவை நம் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத்தவறியது மோதியின் இயலாமை என்று கூட கூறுவர்.


சமீபத்திய செய்தி