உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இங்கிலீஷ் கூட பேசத் தெரியாதா? கணவன் வீட்டார் சித்ரவதை; கேரளாவில் இளம்பெண் தற்கொலை

இங்கிலீஷ் கூட பேசத் தெரியாதா? கணவன் வீட்டார் சித்ரவதை; கேரளாவில் இளம்பெண் தற்கொலை

மலப்புரம்: இங்கிலீஷ் பேச்சுத்திறனை விமர்சித்து கணவனின் குடும்பத்தார் சித்ரவதை செய்து வந்ததால், விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சஹானா மும்தாஜ்,19, என்பவர் பி.எஸ்.சி., கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரியில் படிக்கும் போதே, அப்துல் வஹாப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் அபுதாபியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சஹானா நேற்று முன்தினம் (ஜன.,14) வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த முடிவுக்கு மருமகன் அப்துல் வஹாப்பின் குடும்பத்தினரே காரணம் என்று சஹானாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். சஹானாவின் தோற்றம் மற்றும் இங்கிலீஷ் பேச்சுத்திறனை காரணம் காட்டி, அவரது கணவர் அப்துல் வஹாப்பும், அவர்களின் பெற்றோரும் சித்ரவதை செய்து வந்ததாகக் அவர் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், திருமணமான 22 நாட்களில் அப்துல் வஹாப் அபுதாபி சென்று விட்டதாகவும், அங்கு சென்ற பிறகு, சஹானாவுடன் செல்போனில் பேசுவதை தவிர்த்து விட்டதாக அவரது மாமா அப்துல் சலாம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், சஹானாவின் தோற்றம் மற்றும் இங்கிலீஷ் பேச்சுத்திறனை விமர்சித்து தொடர்ந்து மெசேஜில் சித்ரவதை செய்து வந்ததாக அவர் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக கொண்டாட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தியாகு
ஜன 16, 2025 21:53

அதுல பாருங்க, இங்கு வந்து குர்ஆனில் அது சொல்லவில்லை இது சொல்லவில்லை என்று அமைதி மார்க்க ? மதத்திற்கு சப்போர்ட் செய்யும் ஒருத்தர் கூட ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்க கூடாது, வேலைக்கு செல்ல கூடாது, உடல் முழுவதும் மறைத்து கண்கள் கூட வெளியில் தெரியாமல் பர்தா போட வேண்டும், வீட்டில் ஜன்னல் வைத்து வீடு கட்ட கூடாது, பெண்கள் கார் ஓட்டக்கூடாது என்று பலவித காட்டுமிராண்டி சட்டம் இருப்பதை பற்றி வாய் திறக்கவில்லை. இவ்வளவுதான் இவங்க பொது அறிவு.


Bahurudeen Ali Ahamed
ஜன 19, 2025 10:37

ஆப்கான் தான் உங்கள் கண்களுக்கு தெரியுமா, இதைத்தவிர வேறு இஸ்லாமிய நாடுகள் உங்களுக்கு தெரியாதா, ஆப்கான் பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் பிரதிபலிப்பு இல்லை, எடுத்துக்காட்டுக்கு ஆப்கான் பாகிஸ்தான் என்று கூறும் நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி, புரூணை, குவைத், கத்தார் போன்ற நாடுகளை சொல்லாதது ஏன், மற்ற மதங்களை பற்றி சரியாக உங்களுக்கு தெரிந்தால் பேசுங்கள் வன்மத்தை காக்கவேண்டாம், போய் உங்க வேலையை பாருங்க


mei
ஜன 16, 2025 17:30

எதுக்கு ஆங்கிலம்? அரபு தெரிந்தால் மட்டும் போதாதா?


Muralidharan raghavan
ஜன 16, 2025 16:39

இந்த சிறுவயதில் எதற்கு திருமணம் செய்து வைத்தார்கள். அதுவும் கல்லூரி படிப்பு முடியாமல். எல்லா மதத்தினருக்கும் பொதுவாக ஆண்களின் திருமண வயது இருபத்தியெட்டு, பெண்களுக்கு இருபத்தி நான்கு என்று நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் maturity இருக்கும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 16, 2025 14:34

இது ஒரு குறையா ?? இருந்தாலும் கொலைக்கு உண்மையான காரணம் அதுவா இருக்காது .....


RAMESH
ஜன 16, 2025 14:10

ஏண் ஆங்கிலம் தெரியாது என்பெதெல்லாம் ஒரு காரணமா. மூன்று மாதத்தில் கற்று கொண்டு சரளமாக பேசமுடியும். இந்த கேப்மாரி வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கிடுவான். இதற்கெல்லாம் தற்கொலையா. அம்மா, அப்பாவை நினைத்து பார்த்தால் தற்கொலை பண்ண நினைப்பு வருமா


Bahurudeen Ali Ahamed
ஜன 16, 2025 10:59

மிக வருத்தமான செய்தி, பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு கொஞ்சமாவது தைரியம் கொடுத்து வளருங்கள், பரிட்சையில் தோற்றால் தற்கொலை, கோபமாக திட்டினால் தற்கொலை ஹ்ஹும், என்னத்த சொல்ல, தற்கொலை எந்த விஷயத்திற்கும் தீர்வாக அமையாது


rasaa
ஜன 16, 2025 10:50

இஸ்லாமிய பெண்கள் படிக்கவே கூடாது என்று குரான் கூறுகிறது. பெண்கள் படிப்பது ஹராம். இது தெரியாமல் இப்படி நடத்து கொள்ளலாமா?


பெரிய ராசு
ஜன 16, 2025 11:22

இஸ்லாமிய பெண்கள் மூஞ்சி வெளியே தெரியக்கூடாது என்று குரான் கூறுகிறது. தெரிவது ஹராம்.


kantharvan
ஜன 16, 2025 12:22

எங்கே கூறுகிறது ராசா ஆதாரம் எங்கே?? பகவத் கீதையில் சுலோகத்தோடு ஆதாரம் தர என்னால் முடியும்??


abdulrahim
ஜன 16, 2025 13:27

முட்டாளாக இருந்தால் இப்படித்தான் உளற தோணும்....


Mohammed Jaffar
ஜன 16, 2025 14:45

குரானில் எங்கே அப்படி உள்ளது? கல்வியை தேடுவது ஆண் மற்றும் பெண் மீது கடமை என்றார்கள் நபி முஹம்மது.. இப்படி எல்லாம் முஸ்லீம் வெறுப்பு இருந்த நீங்களும் தற்கொலை முடிவு எடுப்பீர்கள் போல..


Bahurudeen Ali Ahamed
ஜன 16, 2025 16:36

எதுவும் தெரியாமல் உளறக்கூடாது, பெண்கள் படிப்பது ஹராம் என்று குர்ஆனில் எங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம்


RAJ
ஜன 16, 2025 08:12

மல்லூஸ் ஏன் இப்டி??


புதிய வீடியோ