உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டூர்னு சொல்லிட்டு வயநாட்டுக்கு யாரும் இப்போ வராதீங்க... எச்சரிக்கிறது கேரளா போலீஸ்!

டூர்னு சொல்லிட்டு வயநாட்டுக்கு யாரும் இப்போ வராதீங்க... எச்சரிக்கிறது கேரளா போலீஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு; மீட்புப்பணிகளை வேடிக்கை பார்க்க, Dark Tourism என்ற பெயரில் சுற்றுலா பயணிகள் வயநாடு வர கேரள போலீசார் தடை விதித்துள்ளனர்.

மீட்புப்பணிகள்

இந்தாண்டின் கோர நிகழ்வாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ள வயநாடு நிலச்சரிவு பாதிப்புகள் இன்னமும் பலரின் மனதை விட்டு அகலவில்லை. பலி எண்ணிக்கை 300ஐ கடந்துவிட்ட நிலையில், மீட்புப் பணிகளில் ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கடும் உத்தரவு

இந் நிலையில் வயநாடு இப்போது எப்படி இருக்கிறது? மக்களின் மனநிலை என்ன? என்று பார்க்க யாரும் சுற்றுலாவாக வரவேண்டாம் என்று கேரள போலீசார் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அட்ராசிட்டி

துக்கம், துயரம், அழுகுரல்கள், வேதனைகள் நிரம்பிய மக்களின் உணர்ச்சிகளை நேரில் பார்க்க விரும்புவதற்கு Dark Tourism என்று பெயர். எங்கு இதுபோன்ற துயரங்கள் நிகழ்ந்தாலும் அங்கே ஒரு கூட்டம் கைகளில் கேமரா சகிதம் களம் இறங்கி விடுகிறது. 'உள்ளது உள்ளபடி, இருப்பதில் இதுதான் உருப்படி' என வசனங்களுடன் வீடியோக்களை உலவவிட்டு அட்ராசிட்டி கிளப்புவதே அவர்களுக்கு வேலை.

சுற்றுலா வேண்டாம்

அப்படி ஒரு நிகழ்வு அரங்கேறி விடக்கூடாது என்ற திடமான எண்ணத்துடன் 'யாரும் வயநாட்டுக்கு Dark Tourism என்று வந்துவிட வேண்டாம்' என்று கடுமையான உத்தரவை கேரள போலீசார் பிறப்பித்து உள்ளனர்.

போலீசார் தடை

இதுகுறித்து போலீசார் தங்களது எக்ஸ் தள வலை பதிவில் கூறி உள்ளதாவது; நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய முறையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் நாங்கள் முழுமையாக ஈடுபட மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எனவே சுற்றுலா என்ற பெயரில் பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றிப் பார்க்க யாரும் இங்கே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2024 16:58

எதிர்பாராத கோர விபத்து ன்னு மட்டும் சொல்லிறாதீய ..... முற்றிலும் மனிதத்தவறுகளே காரணம் ......


RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2024 16:55

பினராயி விஜயனின் லேட்டஸ்ட் ஸ்டேட்மென்ட் என்ன ???? மீட்புப்பணி இறுதிக்கட்டத்துல இருக்கு ..... ஆனாலும் இன்னும் 206 பேரை மீட்கவேண்டி இருக்கு ...... என்கிறார் ..... ஒன்னுக்கொன்னு முரணா இருக்கா ???? அதுதான் திராவிடம் ........


D.Ambujavalli
ஆக 03, 2024 16:41

தொகுதியின் முன்னாள் எம். பி என்ற முறையில் மக்களின் துயரத்துக்கு ஆறுதல் அளிக்கவும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் பார்லிமென்டில் அவர்களின் நிலைமையைக் கூறி நிவாரணம் கேட்கவும் அவர் சென்றது நியாயமே ஆனால் துயரம், மன உளைச்சல், இருண்ட எதிர்காலம் பற்றிய அதிர்ச்சி என்று பலவித துன்பங்களை அனுபவிப்பவர்களை பேட்டி என்ற பெயரில் மேலும் துயரப்படுத்தும் இந்த tourism தேவையற்றது


அஜய் சென்னை இந்தியன்
ஆக 03, 2024 15:41

ராகுல் காந்தி அந்த தொகுதி MP என்ற முறையில் வருவது தவறு இல்லை. ஆனால் முன்பே இந்த இந்த இடம் landslide ஆக கூடிய சூழ்நிலை இருப்பதாக அறிவிப்பு கிடைத்த பிறகும் நடவடிக்கை எடுக்காதது தவறு தான். அதே போல் தமிழகத்தில் இதே போல் landslide இடம் இருக்கும் இடத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், மிக பெரிய மீண்டும் வர வாய்ப்புகள் அதிகம்.


அருண்
ஆக 03, 2024 14:02

அப்போ ராகுலுக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுத்தீங்க !


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை