உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டு இயந்திர தரவுகளை அழிக்காதீர்கள்: சுப்ரீம் கோர்ட்

ஓட்டு இயந்திர தரவுகளை அழிக்காதீர்கள்: சுப்ரீம் கோர்ட்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின், 'மெமரி கார்டு' மற்றும் 'மைக்ரோ கன்ட்ரோலர்' ஆகியவற்றில் உள்ள தகவல்களை எவ்வாறு அகற்றுகிறீர்கள்? அது குறித்த விபரங்களை தாக்கல் செய்யுங்கள்' என, தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் மற்றும் சில அரசியல் கட்சிகள், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், ஓட்டுப்பதிவு முடிந்த பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் உள்ள மெமரி கார்டு மற்றும் மைக்ரோ கன்ட்ரோலர் ஆகிய கருவிகளில் உள்ள தரவுகள் எவ்வாறு அகற்றப்படுகின்றன என்பது குறித்து புதிய கொள்கையை உருவாக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரினர். மேலும், இத்தகைய தரவுகள் அகற்றப்படுவதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பதை பொறியாளர்கள் உதவியுடன் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரினர்.இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 'இப்போதைக்கு எந்த ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் இருந்தும் தரவுகளை அகற்ற வேண்டாம். இந்த தரவுகளை அகற்றுவதில் எத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்ற விபரங்களை தாக்கல் செய்யுங்கள்' என, உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17க்கு ஒத்திவைத்தனர்.- டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ganesh Subbarao
பிப் 12, 2025 11:00

வேற வேலை இல்லையா? டைம் வேஸ்ட்


Dharmavaan
பிப் 12, 2025 09:07

இடதுசாரி உச்ச நீதி இதை சொல்வது ஆச்சரியமில்லை


GMM
பிப் 12, 2025 08:05

ஜனநாயக சீர் திருத்த சங்கம் ஓட்டுக்கு பணம், இலவசம், சலுகைகள் மூலம் வாக்கு இழுக்கும் யுக்தி, கள்ள குடியேறிகளுக்கு வாக்குரிமை, கட்சி தாவல், தேர்தலில் போட்டியிடாமல் கூட்டணி நிழலில் இளைப்பாறுதல் போன்ற பல குறைபாடுகளை தேர்தல் ஆணையம் , நீதிமன்றம் போன்ற அமைப்புகளை சீர்த்திருத்தம் செய்ய வற்புறுத்தவில்லை. வாக்காளர் , வேட்பாளர் தகுதி, அமைச்சர்கள் ஊழல் வழக்கு பற்றி கவலையில்லை. ஆனால், மெமரி தரவுகள் ... அகற்ற கொள்கை வகுக்க வேண்டுமாம். முறைகேடுகள் நடக்கவில்லை என்று பொறியாளர் உதவியுடன் உறுதி செய்ய வேண்டுமாம். அரசு பொறியாளரா , சங்க பொறியாளரா ? தேர்தல் ஆணையத்தை விட குறைந்த அதிகாரம் உடைய பொறியாளர் முடிவு எப்படி சட்டபடி செல்லும். நீதிபதிகள் ஜனநாயக சீர் திருத்தம் சங்கம் உறுப்பினர்களா ? பொது நல, மக்கள் நல மனு அல்ல. மக்களிடம் சந்தேகம் உருவாக்கி தேர்தலை சீர்குலைக்க முயற்சி. ?


திகழ் ஓவியன், Ajax, Ontario
பிப் 12, 2025 07:54

முதல்ல காஷ்மீர், பஞ்சாப், கர்நாடகா, கேரளா, த நா, மே வங்க முடிவுகளை ஆய்வு செய்து மறு தேர்தலுக்கு உத்தரவு இடவேண்டும்


GMM
பிப் 12, 2025 07:34

வாக்கு பதிவு தகவல் அகற்றாமல் விவரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு சாதாரண குடிமகன் போல் உத்தரவிடுவது, பதிவில் தவறு நிகழலாம் என்ற சந்தேகத்தை உருவாக்கும். நீதிமன்றம் போல் உள்ள சில அரசியல் சாசனம் அமைப்பை மரியாதை கொடுத்து நடத்த உச்ச நீதிமன்றம் மறுத்து வருகிறது. மத்திய அரசும் சட்ட வழி புரியாமல் காலம் கடத்துகிறது. தேர்தல் ஆணையம், கவர்னர் போன்ற பதவியின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் மூலம் குறைத்து வக்கீல்கள் மதிப்பிட்டு வருகின்றனர். இதற்கு முறுப்புள்ளி தேவை.


Dharmavaan
பிப் 12, 2025 09:12

ஒரு பிரெசிடென்ட்டில் ஆணை மூலம் இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரசியல் சாசனம் தற்கால நிலைக்கு பொருந்தாது. பிரிவினைவாதம் தீவிரவாதம் வெளிநாட்டு சதி போன்றவை அப்போது இல்லை சாசனம் திருத்தப்பட வேண்டும்.பழைய சாசனத்தி வைத்துக்கொண்டு தீர்ப்பு கேவலம்


Kasimani Baskaran
பிப் 12, 2025 06:55

சிக்கலே இல்லாத மிக எளிதான ஒரு இயந்திரத்தில் ஓட்டைகள் கண்டுபிடிப்பதில் அதை வடிவமைத்தவர்களை விடக்கூட இவர்கள் நிபுணர்களாக இருக்கிறார்கள் என்பது சோகத்திலும் மகா சோகமானது. ஒரு கட்சி சின்னத்தில் பொத்தானை அழுத்தினால் ஒட்டு எண்ணிக்கை கூடும், அந்தக்கட்சிக்கான கவுண்டர் அதிகரிக்கும். பதிவு முடிந்தவுடன் எத்தனை வாக்கு என்பதை பிரிண்ட் செய்து கொள்ளலாம். அதிகாரிகள் அதை சரிபார்த்துக்கொள்ளலாம். மென்பொருளை மாற்ற முடியாது.


தாமரை மலர்கிறது
பிப் 12, 2025 00:35

பழைய தரவுகளை அழித்தால்தான், மெஷின் சரியாக வேலை செய்யும். இல்லையெனில் ஜாம் ஆகும். தேர்தல் கமிஷன் தன்னிச்சையான அமைப்பு என்பதால், சுப்ரிம் கோர்ட்டின் பேச்சை தேர்தல் கமிஷன் கேட்கவேண்டிய அவசியமில்லை.


Shankar
பிப் 12, 2025 00:20

ஏற்கனவே லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இதுபோன்ற வழக்குகளை நிராகரிக்கவேண்டியது தானே? பலபேர்கள் முன்னிலையில் வாக்குகள் எனப்படுகின்றன. அதுவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்களும் வாக்கு எண்ணிக்கையில் பங்குபெறுகிறார்கள். இன்னும் என்ன சந்தேகம் வரப்போகிறது. ஓட்டு இயந்திரம் என்பது ஒரு சாதாரண கால்குலேட்டர் போலத்தான் என்று இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு புரியவைக்கவேண்டும்?


சமீபத்திய செய்தி