உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரையாடுகள் பிரசவ காலம் இரவிகுளம் தேசிய பூங்கா மூடல்

வரையாடுகள் பிரசவ காலம் இரவிகுளம் தேசிய பூங்கா மூடல்

மூணாறு:இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுகள் பிரசவ காலம் துவங்கியதால் பிப்., 1 முதல் மார்ச் 31 வரை பூங்கா மூடப்பட்டு, ராஜமலைக்கு பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன வரையாடுகள் ஏராளமாக உள்ளன. அவற்றை காண பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலா பயணியரை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். இந்நிலையில் வரையாடுகளின் பிரசவ காலங்களில் பூங்கா மூடப்படும். தற்போது வரையாடுகள் பிரசவ காலம் துவங்கியதால் பிப்., 1 முதல் மார்ச் 31 வரை பூங்கா மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த காலத்தில் ராஜமலைக்கு சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தலைமை வன உயிரின பாதுகாவலர் ஜெயபிரசாத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ