உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீக்கியர் பத்தி தப்பா பேசினா கூண்டில் ஏத்திவிடுவோம்! ராகுலுக்கு பா.ஜ., நச் பதிலடி

சீக்கியர் பத்தி தப்பா பேசினா கூண்டில் ஏத்திவிடுவோம்! ராகுலுக்கு பா.ஜ., நச் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; சீக்கியர்கள் பற்றி தவறாக பேசினால் அவர் மீது வழக்கு தொடர்வேன் என்று பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஆர்.பி. சிங் எச்சரித்துள்ளார்.

விமர்சனம்

அமெரிக்காவில் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மத்திய அரசு பற்றியும் பிரதமர் மோடி குறித்தும் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். அவரின் கருத்துகளுக்கு ஆளும் பா.ஜ., தரப்பில் கடும் பதிலடி தரப்பட்டு வருகிறது.

தலைப்பாகை

அண்மையில் வெர்ஜினியாவில் பேசிய ராகுல், சீக்கியர்கள் பற்றியும் அவர்கள் தலைப்பாகை பற்றியும் குறிப்பிட்டார். இந்தியாவில் நடக்கும் போர் என்பது சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவார்களா, மாட்டார்களா என்பதை பற்றியது என்றார். அவரின் இந்த பேச்சு சீக்கியர்கள் மத்தியில் பெரும் விவாதமாக மாறி இருக்கிறது.

காங்கிரஸ்

இந்நிலையில் ராகுலின் கருத்துக்கு பா.ஜ., கடும் எதிர்வினையாற்றி இருக்கிறது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆர்.பி. சிங் கூறி உள்ளதாவது; டில்லியில் 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தலைப்பாகை அகற்றப்பட்டு, தலைமுடி வெட்டப்பட்டது. இதெல்லாம் நிகழ்ந்தது காங்கிரஸ் ஆட்சியில்.

கோர்ட்

ஆனால் அதை பற்றி எல்லாம் கூறாமல் சீக்கியர்கள் பற்றி தவறாக பேசுகிறார். அவருக்கு நான் சவால் விடுக்கிறேன், இதேபோன்று இந்தியாவில் பேசமுடியுமா? அப்படி ஏதேனும் பேசினால் வழக்கு தொடர்ந்து கோர்ட் வரை இழுப்பேன். இவ்வாறு ஆர்.பி. சிங் கூறினார்.

பொறுப்பு

மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது பொறுப்புள்ள பதவி. அந்த பதவில் இருக்கும் ராகுல் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். வெளிநாடுகளில் பேசும் போது தாய்நாட்டை பற்றி அவதூறாக பேசி நாட்டின் நன்திப்பை சிதைக்கக்கூடாது. ஆனால் ராகுல் தொடர்ந்து அதை செய்து வருகிறார் என்று கண்டித்தார்.

பேசியது சரி

அமெரிக்க சுற்றுப்பயணத்தின் ராகுல் பேசுவதை கடுமையாக பா.ஜ., விமர்சித்து வரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி., சத்ருகன் சின்ஹா கூறுகையில், பா.ஜ.,வில் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு விமர்சனத்தை முன்வைத்துக் கொண்டே இருப்பார்கள். என்னை பொறுத்த வரையில் ராகுல் பேசியது சரி என்று கூறுவேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Saleem
செப் 12, 2024 12:11

பாஜக விற்கு ராகுல்காந்தியை எப்படியாவது வீழ்த்தவேண்டும் என்று எண்ணம் ஆனால் மக்களின் முழுஆதரவும் ராகுலுக்கு இருக்கிறது பாஜகவின் எண்ணம் நிறைவேறாது இதை பாஜக புரிந்து கொள்ளவேண்டும்


RIfay
செப் 11, 2024 15:04

நல்லா அரசியல் செய்றிங்கப்பா சீக்கியர்களுக்கு வராத கோபம் சிறுபான்மை மக்களை அழிக்கும் வேலைகளை பார்க்கும் உங்களுக்கு வருது பாருங்க அது தான் வாய் அரசியல்


Sivagiri
செப் 11, 2024 14:08

விடுங்க பாஸ் . . . பிஜேபியால தைரியமா ராகுலை கைது செய்ய துணிச்சல் வராது - - அந்த தைரியத்தில்தான் பேசிட்டே இருப்பார் . . . இதுவே திராவிட மாடலிடம் இப்டி யாராவது வாலாட்டினால் , தமிழ்நாட்டில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் , வாரண்ட் பிறப்பிக்க படும் , ஒவ்வொரு மாஜிட்ரேட் கோர்டுக்கும் ஜாமீனுக்காக அலைய வேண்டி இருக்கும் . . . கடைசியில் எதுக்காக கைது செஞ்சோம்னு கூட போலீசுக்கே கோர்ட்டுக்கே தெரியாம போயிடும் , , ,


Sridhar
செப் 11, 2024 13:42

சீக்கியர்கள் எங்க பயந்துக்கிட்டா இருக்காங்க? ட்ராக்டர்ல படையெடுத்து வந்து, விட்டா செங்கோட்டை மேல ஏறி கொடியவே னுட்டுருப்பாங்களே? அவ்வளவு சுதந்திரத்தோடு இருக்கறவங்க, தலைப்பா கட்டமுடியால, குருத்வாரா போயி கும்பிடமுடியலைனு சொல்றது நிச்சயமா வேணுமுனே இந்தியாவை பழிக்கறதுக்காக சொல்றதுதான். இதுக்காகவே ஜெயில்ல போடலாம்.


சமூக நல விரும்பி
செப் 11, 2024 12:23

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையே அல்லது தனி ஒரு மணிதனையோ மனம் புண் படும் படி பேசினால் அவர்களுக்கு உடனடி கடுமையான தண்டனை கொடுத்தால் தான் இது போன்ற செயல்களை கட்டு படுத்த முடியும்.


veeramani
செப் 11, 2024 11:11

இந்தியாவின் சீ க்கிய சகோதரர்கள் நமது ராணுவம், தொழில்கள், கோதுமை ற்பத்தி மற்றும் அனைத்து துறைகளிலும் இந்திய மரத்தின் ஆணிவேராக உள்ளனர். ஆணிவேரை அசைத்து பார்க்க முட்டாள்தனமாக ராகுட் காந்தி பேசுகிறார். வம்பை காசு கொடுத்து வாங்க ள்ளார் .இது அவருக்கு நல்லதல்ல. சிறுபிள்ளைத்தனமாக பேசுவதும், செயல்படுவதும் இழிவானசே யல். நிறுத்தவேண்டும்


M.COM.N.K.K.
செப் 11, 2024 10:11

இந்திய ராணுவத்தில் சீக்கிய சகோதரர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது பல ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் அவர்களின் பங்கு சுமார் 47 சதவீதமாக இருந்தது தற்போது அது படிப்படியா குறைந்து விட்டது என்று எண்ணுகிறோம்.அவர்கள் நாட்டுக்காக நிறைய தியாகங்களை செய்திருக்கிறார்கள் ஒருசிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக தவறாக பேசுவது கண்டனத்துக்குரியது .இதை நாங்களும் கண்டிக்கிறோம்


M.COM.N.K.K.
செப் 11, 2024 09:59

சுமார்


அபய்சிங்
செப் 11, 2024 09:52

இதே சீக்கியர் கனடா போனா கெட்டவங்களாயிடறாங்க. எப்பிடி சிங்?


Sampath Kumar
செப் 11, 2024 09:37

உங்க அலைக்கு உள்ளெ உண்ணும் இல்லை தலை பாகைக்குலும் ஒன்னும் இல்லை


வாய்மையே வெல்லும்
செப் 11, 2024 09:57

சம்பத்து நீங்க மட்டும் பஞ்சாபி ஊருல இருந்தால் உங்களோட முப்பத்தி இரண்டு அழகான பற்களும் உருவி இருப்பானுக .


முக்கிய வீடியோ