உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டி.ஆர்.டி.ஓ., அறிவித்த 200 அப்ரென்டிஸ் காலியிடங்கள் : டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு!

டி.ஆர்.டி.ஓ., அறிவித்த 200 அப்ரென்டிஸ் காலியிடங்கள் : டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.,) 200 அப்ரென்டிஸ் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 10.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,) கீழ் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்தின் முன்னணி ஆய்வகமான இமாரத் (ஆர்.சி.ஐ.,) ஆய்வு மையத்தில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கிராஜுவேட் அப்ரென்டிஸ் - 40,டெக்னீஷியன் அப்ரென்டிஸ்- (டிப்ளமோ)- 40, வர்த்தகம் அப்ரென்டிஸ் (Trade Apprentice)- 120

கல்வித் தகுதி என்ன?

கிராஜுவேட் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் [ECE, EEE, CSE, Mechanical, Chemical] ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.டெக்னீஷியன் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் [ECE, EEE, CSE, Mechanical, Chemical] ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.வர்த்தகம் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு பிட்டர், வெல்டர், டர்னர், மெஷினிஸ்ட், மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரீசியன், ஆகியவற்றில் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயதிற்குள் இருக்க வேண்டும். 2022, 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர் https://www.drdo.gov.in/drdo/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்வது எப்படி?

கல்வித் தகுதி மற்றும் நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை